ஏர்டெல், வோடபோன் 'கட்டணங்கள்' திடீர் உயர்வு.. டிசம்பர் 1 முதல் 'அமலுக்கு' வருகிறது!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.
ஜியோ வருகையால் ஏர்டெல், வோடபோன் இரு நிறுவனங்களும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அந்த வரிசையில் 2-வது காலாண்டில் இரண்டு நிறுவனங்களும் கூட்டாக 74 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இதனால் தங்களது கட்டணத்தை உயர்த்த போவதாக இரண்டு நிறுவனங்களும் அறிவித்து உள்ளன.
இதுகுறித்து வோடபோன் நிறுவனம், ''நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. இதிலிருந்து மீளும் வழிவகைகளை முக்கிய கமிட்டி ஆராய்ந்து வருகிறது. சர்வதேச அளவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் இந்தியாவில்தான் மிகவும் குறைவு. இத்துறை இன்னும் மிகப்பெரிய வளர்ச்சி காணும். காரணம், அதற்கான தேவை அதிகம்,'' என தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தரமான சேவையினை வழங்கும் பொருட்டு கட்டணத்தை உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இரண்டு நிறுவனங்களும் கூட்டாக கட்டண உயர்வை அறிவித்துள்ளன. வருகின்ற டிசம்பர் 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதுகுறித்த விவரங்களை விரைவில் இரண்டு நிறுவனங்களும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முடிவுக்கு வரும் ஐயுசி கட்டணம்?.. இனி தனியாக 'ரீசார்ஜ்' செய்ய தேவையில்லை!
- நாங்களும் 'போட்டிக்கு' வருவோம்.. தினசரி '3 ஜிபி' டேட்டா.. வரம்பற்ற அழைப்புகள்.. 'ஜியோ'க்கு சரியான போட்டி!
- திரும்ப 'வந்துட்டேன்னு' சொல்லு.. ஜியோ அளித்த செம 'ஆபர்'.. வாடிக்கையாளர்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி!
- ‘ஒரே பிளானில் இத்தனை ஆஃபரா! ’.. ‘பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு’..
- 'ஜியோவ' கடுப்பேத்துறதே வேலையா போச்சு.. 39 ரூபாய்க்கு செம 'வொர்த்தான' திட்டம்!
- ஜியோ 'ரீசார்ஜ்' பண்ண போறீங்களா?.. இந்த 'ப்ரோமோகோட்' யூஸ் பண்ணுங்க.. 'செம' டிஸ்கவுண்ட்!
- உங்க 'இஷ்டத்துக்கு' எல்லாம் வைக்க முடியாது.. இனி இதுதான் 'ரிங்கிங்' டைம்.. டிராய் அதிரடி!
- 'ஒவ்வொரு' 5 நிமிஷத்துக்கும்.. 'கேஷ்பேக்' தாறோம்.. பிரபல நெட்வொர்க்கின் 'அதிரடி' ஆபர்!
- தொழில் போட்டி.. கடன் சுமை.. இந்தியாவை விட்டு வெளியேறும் 'பிரபல' நிறுவனம்?
- ஜியோ, ஏர்டெல், வோடபோன் சண்டையால்.. 40 ஆயிரம் ஊழியர்கள்.. வீட்டுக்கு அனுப்பப்படலாம்!