இந்தியாவுல 'யாருக்கு' வேணாலும் பேசுங்க.. வாய்ஸ் 'கால்கள்' முற்றிலும் FREE.. அடுத்தடுத்து 'அறிவித்த' நிறுவனங்கள்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிமிடத்திற்கு 6 பைசாவை அதன் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியா முழுவதும் வாய்ஸ் கால்கள் முற்றிலும் ப்ரீ என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர்டெல்லின் அன்லிமிடெட் திட்டங்களின் கீழ் வாய்ஸ் கால்களுக்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது என நேற்றிரவு ஏர்டெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,'' சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கட்டண திட்டங்களுடன் அறிவிக்கப்பட்ட மற்ற நெட்வொர்க் உடனான குரல் அழைப்பு வரம்பு அகற்றப்படுகிறது,'' என கூறியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வேறு எந்தவிதமான நிபந்தனைகளும் இருக்காது என்றும், இனிமேல் ஏர்டெல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களுக்கு, அழைப்பதற்கு எந்தவித வரம்பும் கிடையாது என்றும் இதுகுறித்து ஏர்டெல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஏர்டெல்லின் அறிவிப்பை தொடர்ந்து இன்று காலை வோடபோன் ஐடியா நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்புகள் முற்றிலும் இலவசம் என அறிவித்துள்ளது. ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் இந்த ஆபர்களால் ஜியோ பாதிக்கப்படுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நஷ்டம்,நஷ்டம்னு சொல்லிட்டு.. லாபத்தில்.. ஜியோ, வோடபோனை.. பின்னுக்குத் தள்ளிய ஏர்டெல்!
- 'கட்டணங்களை உயர்த்தி'... ‘புதிய ப்ரீபெய்டு பிளான்களை’... ‘அறிவித்த பிரபல நிறுவனங்கள்'... 'இன்று நள்ளிரவு முதல் அமல்’!
- ‘கஸ்டமர் தான் முக்கியம்’... 'ஆல் இன் ஒன் திட்டத்தில் அதிரடி சலுகை வழங்கும் ஜியோ'!
- ‘42 சதவிகிதம்’ கட்டண உயர்வு.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடியால்’ வாடிக்கையாளர்கள் ‘அதிர்ச்சி’..
- ‘அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்’.. ‘ரொம்ப மலிவான விலையில்’.. அசர வைத்த ஜியோவின் புது அறிவிப்பு..!
- 'ஐயுசி' கட்டணம்.. இன்னும் '2 ஆண்டுகளுக்கு' தொடரும்.. வாடிக்கையாளர்கள் 'கடும்' அதிர்ச்சி!
- ‘கட்டண உயர்வின்றி தொடர’.. ‘பிரபல’ நெட்வொர்க்கின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ‘அசத்தல் ஐடியா’..
- 'வாய்ஸ்' காலுக்கு 67%.. 'டேட்டா'வுக்கு 20% 'கட்டண' உயர்வு.. இனி 'பாத்து' தான் செலவு பண்ணனும்!
- இந்தியாவுல 4ஜி 'மட்டும்' தான் இருக்கணும்.. மக்களே 'முடிவு' பண்ணட்டும்.. செம சண்டை!
- ஏர்டெல், ஜியோ, வோடபோனுக்கு '2 வருடங்கள்' அவகாசம்.. கட்டண 'உயர்வு' முடிவுக்கு வருமா?