இந்தியாவில் சேவையை நிறுத்தபோவது உண்மையா..? அதிரடி விளக்கம் கொடுத்த வோடாஃபோன்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

இந்தியாவில் சேவையை நிறுத்தபோவதாக பரவிய தகவலுக்கு வோடாஃபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் செல்போன் நிறுவனங்கள் பரவலாக தொடங்க ஆரம்பித்தபோது முன்னனியில் இருந்த நிறுவனங்களில் ஒன்று ஹட்ச். இதனை கடந்த 2008 -ம் ஆண்டு வோடாஃபோன் நிறுவனம் விலைக்கு வாங்கி, இந்தியாவில் தனது சேவையை விரிவு படுத்தியது. ஆனால் ஜியோவின் வருகைப்பிறகு அனைத்து நெட்வொர்க்குகளும் சரிவை சந்தித்து. அதில் வோடாஃபோன் நிறுவனம் பெரும் பின்னடவை சந்தித்தது. மேலும் பங்கு சந்தையிலும் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் புதிய தொலைத்தொடர்பு கொள்கையின் படி வருவாய் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அரசு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதனால் வோடாஃபோன் நிறுவனம் 28,309 கோடி ரூபாயை மூன்று மாதத்துக்கு செலுத்த வேண்டிய நெருக்கடியை சந்தித்தது. இதனை அடுத்து வோடாஃபோன் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை நிறுத்த உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு தற்போது வோடாஃபோன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்தியாவில் சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நிலுவை தொகையை செலுத்துவோம். தொடர்ந்து சேவையை வழங்குவோம் என தெரிவித்துள்ளது.

VODAFONE, VODAFONEIDEA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்