ஒருவழியா பிஎஸ்என்எல்-க்கு வரும் புது சேவை..! ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் வரிசையில்...! வெளியான அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு 4ஜி அலைக்கற்றை சேவை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரசுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) தொடக்க காலத்தில் இந்தியா முழுவது கொடிகட்டி பறந்தது. ஆனால் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் போன்ற தனியார் நிறுவனங்களின் வருகையால் கடுமையான பின்னடவை சந்தித்தது. மேலும் ஜியோ 4ஜி சேவையில் பல அதிரடி சலுகைகளை வழங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியது. இதனால் ஏர்டெல், வோடாஃபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் பெரும் பின்னடவை சந்தித்தன. இதனை அடுத்து இவ்விரு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்க 4ஜி சேவையை வழங்க ஆரம்பித்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று (23.10.2019) டெல்லியில் நடைபெற்றது. அதில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்க ஒப்புதல் அளித்து ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அரசுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் (MTNL) ஆகிய இரண்டையும் தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை. இரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது என தெரிவித்தார்.

BSNL, 4G, MTNL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்