“ஏர்டெல், வோடஃபோன், ஜியோ…இங்க வாங்க”- வச்சு செய்த வாடிக்கையாளர்கள், வெளுத்து வாங்கும் ட்ராய்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

டெலிகாம் துறையின் நெறியாளரான ட்ராய் ஏர்டெல் நிறுவனத்தைக் கடுமையாகக் கடிந்துகொண்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டிலேயே வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப்படியான புகார்களைப் பெற்ற டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் ஏர்டெல் நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது என ட்ராய் தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

நாடாளுமன்றத்தில் ட்ராய் வெளியிட்ட அறிக்கையை தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் வெளியிட்டுப் பேசினார். ட்ராய் கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் 2021-ம் ஆண்டு முழுவதுமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக புகார்களைப் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் ஏர்டெல் முதல் இடத்தில் உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் மீது மட்டும் 16,111 புகார்கள் 2021-ம் ஆண்டில் பெறப்பட்டுள்ளதாம்.

இந்தப் பட்டியலில் 2-ம் இடத்தில் வோடஃபோன் ஐடியா மற்றும் 3-ம் இடத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் உள்ளன. வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு எதிராக 14,487 புகார்களும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு எதிராக 7,341 புகார்களும் இந்த 2021-ம் ஆண்டில் பதிவாகி உள்ளன. வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் 14,487 புகார்களுள் 9,186 புகார்கள் ஐடியா வாடிக்கையாளர்களிடமிருந்தும் 5,301 புகார்கள் வோடஃபோன் வாடிக்கையாளர்கள் இடமிருந்தும் பெறப்பட்டுள்ளன.

MTNL மீது 732 புகார்களும் BSNL மீது 2,913 புகார்களும் வாடிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன என ட்ராய் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் ட்ராய் இடம் நேரடியாக வந்த புகார்களாம். பொதுவாக விதிப்படி தனி நபர்களின் புகார்களை ட்ராய் சரி செய்வது இல்லை என்றாலும் 2021-ம் ஆண்டில் வந்த தனி நபர்களிடமிருந்து வந்த புகார்கள் அனைத்தும் உரிய டெலிகாம் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், வாடிக்கையாளர்கள் தங்கள் டெலிகாம் நிறுவனம் குறித்த புகார்களை நிச்சயமாக ட்ராய் இடம் பதிவு செய்யலாம். அதன் பின்னர் புகார்களுக்கு உரிய டெலிகாம் நிறுவனங்கள் புகார்கள் குறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் ட்ராய் இடமே மேல்முறையீடும் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SMARTPHONE, AIRTEL, TRAI, ஏர்டெல், ட்ராய், ஜியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்