“திரும்பி வந்துடேன்னு சொல்லு...டிக்டாக் இஸ் பேக்”!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்தடை நீக்கப்பட்டதால் டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது.
டிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டிக்டாக் செயலிக்கு மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டனர். இதனிடையே டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் ப்ளே ஸ்டோர் நீக்கியது.
இதைத்தொடர்ந்து, அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், டிக்டாக் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், டிக்டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி டிக்டாக் நிறுவனத்தின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக்டாக் செயலி மீதான தடையை நீக்கியது. இந்நிலையில், தடை நீக்கப்பட்டதால் டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டிக்-டாக்' செயலி மீதான தடை .. நிபந்தனைகள் விதித்த நீதிமன்றம்.. மீண்டும் 'டிக் டாக்' பதிவிறக்கம்?
- டிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!
- டிக் டாக்: தடையை நீக்கக் கோரிக்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி!
- 'துப்பாக்கி வெடித்ததால்.. நண்பன் பலி'.. 'டிக் டாக்' வீடியோ விபரீதம்!
- 'இனிமேல் ‘டிக்-டாக்’ல...'வசனம்,டான்ஸ்' எல்லாம் பண்ண முடியாது'...அதிரடி நடவடிக்கையில் ஐகோர்ட்டு!
- இனி ‘இந்த வகையான ஷோ’ க்களை டிவி-யில் ஒளிபரப்ப தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
- அரசுப் பேருந்தில் சாகசம்... தலைகீழாகத் தொங்கும் மாணவர்கள்... உறைய வைக்கும் காட்சிகள்!
- ‘போலீஸ் சீருடையில் டிக்டாக் வீடியோ’.. வைரலான காட்சிகள்!
- முதல்முறையாக குடும்பத்தை சேர்த்து வைத்த டிக்டாக்.. எப்படி தெரியுமா?