இனி ‘இதெல்லாம்’ பெற்றோர்கள் ‘கையில்தான்’... ‘குவியும்’ புகார்களால் ‘செக்’ வைத்த ‘டிக்டாக்’... அறிமுகப்படுத்தியுள்ள ‘புதிய’ வசதி...

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினர் பயன்படுத்தும் டிக்டாக் செயலியை பெற்றோர்கள் கட்டுப்படுத்தும் வகையில் புதிய வசதி ஒன்றை டிக்டாக் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக அளவில் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்றான  டிக்டாக் செயலியை  800 மில்லியன் பேர் பயன்படுத்திவருகின்றனர். இளைய தலைமுறையினரிடம் இந்த செயலி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவர்களை தவறாக வழிநடத்துகிறது என ஒருபக்கம் இதன்மீது புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. முன்னதாக இந்தியாவில் கூட இந்த செயலிக்கு தடைவிதிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குழந்தைகள் டிக்டாக் செயலி பயன்படுத்துவதை பெற்றோர்கள் கட்டுப்படுத்தும் வகையில் புதிய வசதி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.  ஃபேமிலிமோட் (Family Mode) எனும் அந்த வசதி மூலமாக குழந்தைகள் நேரடியாக மெசேஜ் அனுப்புவதை தடுப்பது, எவ்வளவு நேரம் செயலியைப் பயன்படுத்த வேண்டும், என்ன விஷயங்களைப் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்களைப் பெற்றோர்கள் கட்டுப்படுத்த முடியும். மேலும் பெற்றோரின் டிக்டாக் கணக்கை குழந்தைகளின் டிக்டாக் கணக்குடன் இணைத்தும் பயன்படுத்த முடியும். தற்போது பிரிட்டனில் மட்டும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TIKTOK, APP, PARENTS, FAMILY, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்