‘முடிவுக்கு வந்த சகாப்தம்’!.. தொடர் நஷ்டத்தால் ‘Smartphone’ விற்பனையை நிறுத்திய பிரபல நிறுவனம்.. வெளியான ‘அதிகாரப்பூர்வ’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பிரபல எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எல்ஜி (LG) எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இதுகுறித்த தகவல் பரவி வந்த நிலையில், தற்போது உறுதியாகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்களின் பங்கு அதிகம் இருக்கின்ற சூழலில் எல்ஜி நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்ஜி நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம் ஸ்மார்ட்போன் வணிகத்தில் சந்தித்த தொடர் நஷ்டம்தான் எனக் கூறப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் சுமார் 751 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஸ்மார்ட்போன் பிரிவில் அந்நிறுவனம் இழந்துள்ளது.

கூகுள், பேஸ்புக், வோக்ஸ்வேகன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் எல்ஜி-ன் மொபைல் பிரிவை வாங்க ஆர்வம் செலுத்தி வந்தன. ஆனால் வணிக ரீதியிலான பேச்சுவரத்தையில் இறுதி முடிவு எட்டப்படாததால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.

அதே நேரத்தில் மடிக்கும் வகையிலான ரோலபில் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட எல்ஜி திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாவே இந்த பணியில் அந்நிறுவனம் ஈட்டுபட்டு வருகிறது. ஆனால் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்