'ஒன்னா ரெண்டா.. 20 வருஷம்டே' .. கொண்டாடும் கூகுளின் ஊழியர்.. இப்ப என்னவா இருக்கார் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்20 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் தேடுபொறியான கூகுளில் 20 வருடங்கள் பணிபுரிந்துள்ளதாக கூகுளின் யூடியூப் விங்கின் முதன்மை செயலாளர் சூசன் வாஜ்சிக்கி கொண்டாடப்பட்டு வருகிறார்.
அந்த காலத்தில் லைகோஸ், அல்டாவிஸ்டா, எக்ஸைட் போன்ற தேடுபொறிகளுடன் யாஹுவும் லீடிங்கில் இருந்த சமயம்தான் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் இரு இளைஞர்களான லாரி பேஜ் மற்று செர்ஜி பெரின் இருவரும், ஒரு இணையபொறியை உருவாக்கத் திட்டமிட்டனர்.
இதில் லாரி பேஜ், தேடுபொறியில் அனைத்து வலைப்பக்கங்களும் கிடைப்பதற்கான பணியையும், செர்ஜி பெரின் அதற்கான அல்கோரிதங்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு பேக்ரப் என்கிற பெயரில் சிறிதாகத் தொடங்கிய தேடுபொறி தளத்தை ஆல்பாபெட் எனும் பேரண்ட்டல் நிறுவனத்துக்குக் கீழ் 1998-ஆம் ஆண்டுவாக்கில் கூகுளாக அறிமுகப்படுத்தினர்.
அதற்கு அடுத்த ஆண்டே, அதாவது 1999-ஆம் ஆண்டு கூகுளின் 16வது ஊழியராக இணைந்த சூசன் வாஜ்சிக்கிதான் தற்போது தனது 20-ஆம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறார். கூகுள் போன்ற தொழில்நுட்ப சித்தாந்த போட்டிகள் நிறைந்த ஒரு நிறுவனத்தில் 20 ஆண்டுகள் ஒரு பெண்ணாக தாக்குப் பிடித்த சூசன் வாஜ்சிக்கி 20 ஆண்டுகள் கூகுள் பணிபுரிந்ததற்காக கேக் வெட்டி கொண்டாடப்படும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று அசுர வளர்ச்சியின் ஆபத்பாந்தவனாக, டிஜிட்டல் யுகத்தின் தீர்மானகாரியாக எழுந்து நிற்கும் கூகுளின் முதன்மை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இனிமேல் கூகுள்லையும் உணவு ஆர்டர் செய்யலாம்..! புது ஆப்ஷனை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம்!
- 'இந்த போன்களில் இனி கூகுள் ப்ளே ஸ்டோர், யூடியூப் இல்லை'... 'வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி'!
- டிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!
- ‘அனுப்புனது பில்லுதான்.. ஆட்டய போட்டது ரூ.800 கோடி’.. எங்க போய் கைவெச்சிருக்காரு பாருய்யா!
- '21-வது வயதில் 1.2 கோடி சம்பளம்'...ஐஐடி தேர்வில் தோற்றாலும் எப்படி சாத்தியமானது?
- ’நல்லது.. அந்த நாட்டுக்கு ஆதரவா இல்ல’.. உலகப்புகழ் தமிழரை அழைத்துப் பாராட்டிய ட்ரம்ப்!
- அமேசான் நிறுவனம் அதிரடி! கலக்கத்தில் கூகுள்!
- வேல ஒண்ணுதான்.. ஆனா பெண்களுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்கும் கூகுள்.. ஏன்?