'யாராவது தப்பான போஸ்ட் போட்டீங்கனா...' 'ஸ்ட்ரிக்ட் ஆக்சன் எடுப்போம்...' 'அதேப்போல லைக் போடுறதுக்கு முன்னாடி...' - கடும் எச்சரிக்கை விடுத்த ஃபேஸ்புக்...!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

முகநூலில் தவறான கருத்துக்களை பதிவிடுவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முகநூல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், முகநூலில் இருக்கும் எங்கள் பயனாளர்களுக்கு உண்மையான சம்பவங்களை கொடுக்க விரும்புகிறோம். கொரோனா தடுப்பூசி மற்றும் பாதிப்பு, பருவநிலை மாற்றங்கள், தேர்தல் போன்ற தீவிரத்தன்மை மிகுந்த தகவல்களை தவறாக பகிரும் நபர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதோடு இவ்வாறு தவறான செய்திகளை பதிவிடும் பயனாளரின் பதிவுகள், வெகுஜன மக்களை அடையாதபடி நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

எந்தவொரு தவறான பதிவுகளும் எங்களின் பயனாளர்கள் பார்த்து லைக் செய்வதற்கு முன்பே அந்த பக்கத்திலுள்ள தகவல் சரிபார்க்கப்பட்ட - நம்பத்தகுந்த பதிவுகள் அவருக்கு காட்டப்படும். அதற்கான பாப்-அப் ஒவ்வொரு பேஸ்புக் பக்கத்துக்கும் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்