யாரெல்லாம் 'அந்த போன்' யூஸ் பண்றாங்களோ... 'அவங்க தான் மெயின் டார்கெட்...' 'அந்த போன்ல இருக்குற எல்லா...' - வெளியாகியுள்ள 'அதிர' வைக்கும் தகவல்...!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியா உட்பட பல நாடுகளில் அரசை எதிர்ப்பவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் போன்றவர்களை உளவு பார்க்கப்பட்டது அம்பலமானது.

சர்வதேச நாளிதழ்கள், பெகாசஸ் உளவு மென்பொருள் இந்தியாவிலும் பத்திரிக்கையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது.

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் குறித்து விசாரணை நடத்த கூறி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் பெகாசஸ் உளவு குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மீண்டும்  பெகாசஸ் மென்பொருள் மூலம் ஐ-போன் பயன்படுத்துவோரை குறிவைத்து உளவு பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக ஆப்பிள் நிறுவனம் அதனை தடுக்க மாற்று மென்பொருள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்