'என்னது இந்த போன்கள் இனி விற்பனை இல்லையா?'... 'வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி'!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

இந்திய செல்போன் சந்தையிலிருந்து சோனி மொபைல் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சோனி நிறுவனம் செல்போன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகிறது. லாபம் ஈட்டாத நாடுகளில் தனது வர்த்தகத்தை சோனி மொபைல் நிறுத்தப்போவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜப்பானில் நிறுவன சந்திப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதில் வர்த்தகம் குறித்து சோனி நிறுவனம் பல தகவல்களை தெரிவித்ததாகத் தெரிகிறது.

அதில் 2020 ஆண்டு நிதியாண்டில் ஒட்டுமொத்த செலவுகளை 57 சதவிகிதமாக குறைக்கவுள்ளதாக சோனி மொபைல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜப்பான், தைவான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுடனான செல்போன் வர்த்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாகவும் சோனி நிறுவனம் கூறியுள்ளது. இந்த நாடுகளில் எதிர்காலத்தில் 5 ஜி தொழில்நுட்ப மொபைல்களில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

அந்தப் பட்டியலில் இந்தியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெறவில்லை. இதனால் இந்திய வர்த்தகத்திலிருந்து சோனி மொபைல் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புதிய சோனி மொபைல் போன் விற்பனையை நிறுத்தபோவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், ஏற்கனவே உள்ள சோனி மொபைல் வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தொடரும் என்றும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. சோனி நிறுவனத்தின் இந்த முடிவால் 2000 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SONYMOBILE, BUSINESS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்