சந்தையில் சாம்சங் நிறுவனம் களமிறக்கும் Galaxy Z Fold4 போன்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சாம்சங் நிறுவனம் சந்தையில் களமிறக்கியுள்ள Galaxy Z Fold4 ஸ்மார்ட் போன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அப்படி என்ன சிறப்பம்சங்கள் இதில் அமைந்துள்ளன என்பதை விரிவாக பார்க்கலாம்.

Advertising
>
Advertising

Also Read | இப்படியும் ஒரு துயர சம்பவமா..? தலை முடியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் ஏர்போர்ட் அதிகாரிகள்..!

ஸ்மார்ட் போனின் புழக்கம் கடந்த பத்தாண்டுகளில் கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் புதுப்புது அம்சங்களுடன் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது படைப்புகளை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் ஃபோல்டபிள் எனப்படும் மடிக்க கூடிய ஸ்மார்ட் போனை வெளியிட்டு அனைவரையும் திகைக்க வைத்தது சாம்சங் நிறுவனம் அதன் நீட்சியாக அண்மையில் இந்நிறுவனம் Galaxy Z Fold4 எனும் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

Credit : Samsung

டிஸ்பிளே

வெளிப்புறத்தில் 6.2 அங்குல HD+ Dynamic AMOLED ஸ்க்ரீன் பயனாளர்களை ஈர்த்துள்ளது என்றே சொல்லவேண்டும். மேலும், 2316 x 904 (HD+) தெளிவுத் திறன் பயனர்களுக்கு அதி துல்லிய திரை அனுபத்தை சாத்தியமாக்கும். 2176 x 1812 (QXGA+) தெளிவுத்திறனுடன் கூடிய 7.6 இன்ச் ஃபோல்டிங் ப்ரைமரி டிஸ்ப்ளே மடிக்கக்கூடிய கண்ணாடி மூலம் பாதுகாக்கப்படுகிறது. பார்க்க டேப்லட் போலவே இருக்கும் இந்த ஸ்மார்ட் போன் அகலமான திரை வசதிகளை பயனர்களுக்கு அளிக்கிறது.

கேமரா

கேமராக்களை பொறுத்தவரை 50 MP வைட் ஆங்கிள் லென்ஸ், 12MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. கவர் டிஸ்பிளேயில் 10 MP செல்பி கேமராவும், உட்புற டிஸ்பிளேயில் 4 MP செல்பி கேமராவும் இடம்பெற்றிருக்கிறது. மொத்தமாக Galaxy Z Fold4 ஸ்மார்ட் போனில் 5 கேமராக்கள் அமைந்திருக்கின்றன.

Credit : The Verge

விலை

Snapdragon 8+ Gen 1 ப்ராசஸர் மற்றும் ஆண்டராய்டு 12L ஓஎஸ் இருப்பதால் அதிகப்படியான உபயோகத்தின்போதும் போன் சிறந்த அனுபவத்தை கொடுக்கும். மேலும், இந்த போனில் 4,400 mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. நீண்ட நேரம் போன் பயன்படுத்துபவர்களுக்கு இதனால் இரண்டு முறையேனும் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். மெமரியை பொறுத்தவரை 12GB of RAM மற்றும் 256GB ROM இருக்கிறது. இத்தனை அம்சங்களை கொண்டுள்ள இந்த Galaxy Z Fold4 ஸ்மார்ட்போனின் விலை 1,54,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Also Read | உலகத்தின் Secret- ஆன பதுங்கு குழி.. பார்த்து பார்த்து கட்டிருக்காங்க.. எல்லாமே பக்கா பிளான்.. மிரள வைக்கும் பின்னணி..!

SAMSUNG, SAMSUNG GALAXY, SAMSUNG GALAXY Z FOLD4, SAMSUNG GALAXY Z FOLD4 FEATURES, SAMSUNG GALAXY Z FOLD4 PRICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்