யாருமே கண்டுபிடிக்காத சின்ன மிஸ்டேக் தான்...! 'கண்டிபிடிச்சு சொன்னதால இளம்பெண்ணிற்கு அடித்த ஜாக்பாட்...' - மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

மைக்ரோசாப்ட்-ல் இருக்கும் தவறை கண்டுபிடித்து அதனை தெரிவித்த இளம்பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் அதிதீ சிங். இவருக்கு தற்போது 20 வயதாகும் இவர் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் மேப் மை இந்தியாவின் பிழையை கண்டறிந்து தெரிவித்ததன் காரணமாக கல்வி ஆவணங்கள் இல்லாமல் இவரை பணியில் சேர்த்து கொண்டது. மேலும் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் இருக்கும் பிழையை கண்டறிந்து அதனை தெரிவித்துள்ளார். அதற்கு பேஸ்புக் நிறுவனம் இவருக்கு ரூ.5.5 லட்சம் பரிசு அறிவித்து வழங்கியது.

இந்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிழையை கண்டுபிடித்துள்ளார். அந்நிறுவனத்தில் இருக்கும் ஆர்.இ.சி. என்ற தொலைக்குறியீடு செயல்படுத்துதல் பிரிவின் பிழையை கண்டறிந்து அதனை அந்நிறுவனத்திடம் கொண்டுப்போய் சேர்த்துள்ளார்.

எவருமே கண்டுபிடிக்காத அந்த பிழையை கண்டுபிடித்து கூறியதால், அவரை பாராட்டும் விதமாக முப்பதாயிரம் டாலர் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 22 லட்சம் ஆகும். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்