VIDEO: 'ஸ்க்ரீன் ப்ரைட்னஸ் (screen brightness) மாற்றம் செய்தாலே போதும்... உங்கள் கணினியை ஹேக் செய்துவிடலாம்!'... பதறவைக்கும் ஆய்வு முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

கணினிகளின் ஸ்க்ரீன் ப்ரைட்னஸில் (screen brightness) மாற்றம் செய்வதன் மூலம், கணினியை ஹேக் செய்ய முடியும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பென் குரியான் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், ஸ்க்ரீன் ப்ரைட்னஸை மாற்றும் போது கணினியை ஹேக் செய்ய முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஸ்மார்ட் ஃபோன், ஐ-பேட், மடிக்கணினி முதலானவற்றை பல்வேறு முறையில் ஹேக் செய்யப்பட்டுவருவதால், தகவல் பாதுகாப்பின்மை குறித்து வெகுஜன மக்கள் அச்சப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், பிற தொழில்நுட்ப கருவிகளோடு தொடர்பில் இல்லாத கணினிகளையும் ஹேக் செய்ய இயலும் என்பது தெரியவந்துள்ளது. LCD திரைகளைப் பயன்படுத்தும் கணினிகளில், RGB என்ற கலர் ஆப்ஷன் இருக்கும். அந்த ஆப்ஷனில் செய்யப்படும் வண்ண மாற்றங்களை, கேமரா பொருத்தப்பட்ட கருவியோடு இணைத்து, அந்த கணினியை ஹேக் செய்யலாம். இந்த இணைப்பை ஏற்படுத்த, குறிப்பிட்ட மால்வேரை, Pen drive மூலம் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால், RGB ஆப்ஷனுக்கும் கேமராவுக்குமான இணைப்பு நிகழ்ந்துவிடும். அதன் மூலம், அந்த கணினியில் மேற்கொள்ளப்படும் அனைத்து செயல்களையும் கண்டறிய முடியும்.

இந்த ஆய்வு முடிவுகள், கணினி மற்றும் ஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

COMPUTER, BRIGHTNESS, HACKING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்