'ஒரு ரூபாய்'க்கு ரீசார்ஜ் சலுகையை அறிவித்த 'பிரபல' நெட்வொர்க்...! இந்த 'ஆஃபர்' உங்களுக்கு இருக்கான்னு 'எப்படி' பாக்குறது...?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பிரபல செல்போன் நெட்வொர்க் நிறுவனம் ரூ. 1 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது.

'ஒரு ரூபாய்'க்கு ரீசார்ஜ் சலுகையை அறிவித்த 'பிரபல' நெட்வொர்க்...! இந்த 'ஆஃபர்' உங்களுக்கு இருக்கான்னு 'எப்படி' பாக்குறது...?
Advertising
>
Advertising

சமீபத்தில் அனைத்து நிறுவனங்களின் பிரீபெயிட் கட்டணங்களும் உயர்த்தப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அண்மையில் தனது சலுகை கட்டணங்களை உயர்த்தியது. விலை உயர்வு டிசம்பர் 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 1 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

Reliance Jio has announced a new prepaid offer of Rs.1

புதிய ரூ. 1 விலை ஜியோ சலுகைக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. இதில் 100 எம்.பி. டேட்டா பேக் வழங்கப்படுகிறது. 100 எம்.பி. டேட்டா முடிந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்பட்டு விடும். ஆயினும், வாடிக்கையாளர்கள் மீண்டும் ரூ. 1 விலை சலுகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த சலுகையை பெறுவதற்கு முதலில் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணிற்கு குறிப்பிட்ட புதிய சலுகை வழங்கப்பட்டு உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

சலுகை உள்ளதா என அறிந்துக்கொள்ள மை ஜியோ ஆப்பின் ரீசார்ஜ் ஆப்ஷன் சென்று வேல்யூ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து அதர் பிளான்ஸ் பகுதியில் ரூ. 1 சலுகையை பார்க்க முடியும். அப்படி இருந்தால் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம்.

RELIANCE, JIO, PREPAID, RS.1, ஜியோ, ரிலையன்ஸ், ரூ. 1

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்