வளைச்சு வளைச்சு கட்டணத்தை உயர்த்திய ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன்.. வாடிக்கையாளர்கள் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை அடுத்தடுத்து உயர்த்தியது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியாவில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க்குகளாக ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் (Jio, Airtel, Vodafone Idea) ஆகியவை உள்ளன. இதில் ஏர்டெல் நிறுவனம் திடீரென தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது. இதனை தொடர்ந்து வோடஃபோன் நிறுவனமும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியது.

முன்னணி நெட்வொர்க் சேவைகள் அடுத்தடுத்து ரீசார்ஜ் தங்களின் கட்டணங்களை உயர்த்தியது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஜியோ நிறுவனம் மட்டும் ரிசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாமல் இருந்தது. இது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி வந்தது.

இந்த சூழலில் ஜியோ நெட்வொர்க்கும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 20 சதவீதம் வரை உயர்த்தியது. இந்தியாவில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மூன்று மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் பலரும் பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க்குக்கு மாறியுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் வேறு ஒரு நெட்வொர்க்குக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறி, சிலர் புதிதாக பிஎஸ்என்எல் சிம் வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

JIO, AIRTEL, VODAFONE, BSNL, VI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்