அமெரிக்காவின் பிரபல நிறுவனத்துக்கு கைமாறும் ‘TikTok’.. கெடு விதித்த கடைசி நாளில் நடந்த ‘டீலிங்’..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்டிக்டாக்கை கையகப்படுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனம் ஆரக்கிளுடன் டிக்டாக் நிறுவனம் வெற்றிகரமாக பேச்சுவார்த்தையை முடித்துள்ளது.
பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்தின் டிக்டாக் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அமெரிக்க அரசு அச்செயலியை தடை செய்தது. இதனை அடுத்து டிக்டாக்கை செப்டம்பர் 15ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் கெடு விதித்திருந்தார்.
இதனை அடுத்து டிக்டாக்கை விலைக்கு வாங்க மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகிய இரு நிறுவனங்கள் போட்டி போட்டன. இதனிடையே டிக்டாக்கை ஆரக்கிள் நிறுவனம் வாங்குவது தான் சரியாக இருக்கும் என்றும், மற்றவர்களை விடவும் ஆரக்கிள் நிறுவனத்துக்கு தான் டிக்டாக்கை நிர்வகிக்கும் திறன் இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இதனை அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டிக்டாக் விற்கப்படாது என பைட்டான்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக்குடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிக்டாக் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்துக்கு இடையே முடிந்துள்ள ஒப்பந்தத்தை இந்த வாரம் மதிப்பாய்வு செய்யவுள்ளதாக அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனிமே Tiktok எல்லாம் இங்க Ban மா!'.. ட்ரெண்ட் ஆகும் 'Google களமிறக்கிய' புதிய வீடியோ பகிர்வு வசதி!
- 'கூடி வந்த கல்யாணம், கைக்கு வந்த வேலை'... 'வருங்கால கணவருடன் அவுட்டிங் போன இளம் என்ஜினீயர்'... ஒரே ஒரு செல்ஃபியால் வந்த விபரீதம்!
- "சவாலை ஏற்கிறேன்!".. 'டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்' கேட்டதற்காக களத்தில் இறங்கும் 'இவாங்கா டிரம்ப்'!
- 'எங்கிட்ட அவரு எல்லாமே சொல்லுவாரு'... 'ட்ரம்ப்பிடம் கிம் ஜாங் உன் பகிர்ந்த 'பகீர்' தகவல்!'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தரும் ரகசியம்'...
- 'நீங்க நம்பலனாலும் இதான் நெசம்!'.. 2021-ஆம் ஆண்டு 'அமைதிக்கான' நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட 'அதிபர் டிரம்ப்'!
- 'அந்த நாட்டையே இந்தியா முந்திடுச்சு, இப்படியே போனா'... 'இதுவரை இல்லாத பாதிப்பாக ஒரே நாளில்'... 'வெளியாகியுள்ள ஷாக் தகவல்!'...
- 'இந்தியர்கள் ஓட்டு உங்களுக்கு கிடைக்கும்னு நினைக்கறீங்களா?'... 'எனக்கு அவரோட சப்போர்ட் இருக்கு'... 'அதிபர் ட்ரம்ப் நம்பிக்கையுடன் சொன்ன பதில்'...
- 'அதுல ஒரு குத்து.. இதுல ஒரு குத்து!'.. 2 டைம் ஓட்டு போடச் சொன்ன டிரம்ப்? US தேர்தலில் எழுந்த புதிய குழப்பம்?
- 'வேலை கேட்டு போன இடத்துல'... 'இளைஞர் செய்த வெறலெவல் திருட்டு'... 'எல்லோரும் இப்படியே இருந்துட்டா'... 'திகைத்துப்போன போலீசார்!'...
- 'இத்தனை பாதிப்புக்கு நடுவிலும்'... 'புதிதாக 12,000 பேருக்கு வேலை'... 'பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!'...