'இயர்பட்ஸ் வாங்க ஐடியா இருக்கா?'... '25ம் தேதி வர பொறுங்க'... கம்மி விலையில், அசத்தலாக வரும் இயர்பட்ஸ்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

இயர்பட்ஸ் என்பது தற்போது பாட்டுக் கேட்பவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. ஹெட்போனில் இருக்கும் ஒயர் போன்ற எதுவும் இல்லாத காரணத்தால் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் வரும் ஜூன் 25 ஆம் தேதி ஒப்போ நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் (டிடபிள்யூஎஸ்) இயர்பட்ஸ் ஆன என்கோ டபிள்யூ 11 அறிமுகமாக உள்ளது. இது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை பிளிப்கார்ட் வழியாக வாங்க முடியும். இதில் ப்ளூடூத் வி 5.0 ஆதரவு, டச் கண்ட்ரோல்ஸ் மற்றும் ஐபி 54 நீர் எதிர்ப்பு மதிப்பீடு போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதனை 5 மணி நேரம் தொடர்ந்து சார்ஜ் செய்தால் 20 மணி நேர தொடர் மியூசிக் அனுபவத்தை அனுபவிக்கலாம் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் ஒப்போ Enco W11 இயர் ட்ஸின் விலை ரூ.2,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதன் விற்பனை வருகிற ஜூன் 25 முதல் பிளிப்கார்ட் வழியாக தொடங்க  திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், ''இதன் இயர்பட்ஸ் "லெஸ் லேடன்சி" மற்றும் "ஸ்டேபிள் கனெக்ஷன்" ஆகியவற்றை வழங்குவதாக ஒப்போ நிறுவனம் கூறியுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் ஆனது 5 மணிநேர மியூசிக் பிளேபேக் மற்றும் மொத்தம் 20 மணிநேர பிளேபேக் கிடைக்கும்.

மேலும் தொலைப்பேசி அழைப்புகள் நாய்ஸ் கேன்சலேஷன், பிளே மற்றும் பாஸ் செய்ய ஒன் டச் கண்ட்ரோல்கள், டிராக்கை மாற்ற அல்லது அழைப்புகளுக்குப் பதிலளிக்க அல்லது அழைப்புகளைத் துண்டிக்க டபுள்-டாப், வாய்ஸ் அசிஸ்டென்ட்டை ஆக்டிவேட் செய்ய ட்ரிபிள் டாப் போன்ற அம்சங்களும் இதில் அடங்கியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்