'WhatsApp-வில் யாராவது லெந்தா பேசுறாங்களா'?... 'இனிமேல் அதற்கு விடுதலை'... WhatsApp கொடுக்கவுள்ள அல்டிமேட் அப்டேட்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வாட்ஸ்அப்யில் வந்துள்ள புதிய வசதி மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் ஆடியோ மெசேஜை FAST FORWARD செய்ய அனுமதிக்கலாம்.

தற்போதைய காலகட்டத்தில் தகவல் தொடர்பிற்காக முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது வாட்ஸ்அப் தான். அதன் மேல் ஆயிரம் குறைகள் மற்றும் தனிநபர் குறித்த தகவல்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் வாட்ஸ்அப் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. வாட்ஸ்அப் அவ்வப்போது புதிய அப்டேட்களை அவ்வப்போது வழங்கி வருகிறது.

இந்நிலையில் நீண்ட ஆடியோ மெசேஜ்களைக் கேட்பதை எளிதாக்கும் புதிய அம்சத்தை உருவாக்க வாட்ஸ்அப் தயாராக உள்ளது. வாட்ஸ்அப் குறித்த தகவல்களை அவ்வப்போது வழங்கி வரும் WABetaInfo தளம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி  வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தைச் சோதிக்கிறது, இது iOS-இல் ஆடியோ மெசேஜ் பேக்கிரவுண்ட் ஸ்பீடை மாற்ற அனுமதிக்கும்.

அதாவது ஒரு வீடியோவை பாஸ்ட் பார்வேட் செய்வது போல, ஒரு வாட்ஸஅப் ஆடியோ மெசேஜை நீங்கள் 1.5 எக்ஸ் அல்லது 2 எக்ஸ் வேகத்தில் பிளே செய்ய இயக்க முடியும். பயனாளர்கள் ஸ்டாண்டர்ட் 1 எக்ஸ் வேகத்திலும் ஆடியோ மெசேஜ்களைக் கேட்கலாம். குறிப்பாக உங்கள் நண்பர்கள் யாராவது வழக்கம் போல மிகவும் மெதுவாகப் பேசும் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜை உங்களுக்கு அனுப்பினால், அந்த மெசேஜை நீங்கள் விரைவாகப் புரிந்துகொள்ள பிளேபேக் வேகத்தை அதிகரிக்கலாம்.

இந்த வசதி பீட்டாவில் இருப்பதாகவும், வாட்ஸ்அப் வெர்ஷன் 2.21.60.11 இந்த அம்சத்துடன் வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் WABetaInfo- வெளியிட்டுள்ள தகவலின் படி, iOS மற்றும் Android பீட்டா பயனர்களுக்கு “WhatsApp Web Beta” திட்டம் உருவாக்கம் பெறுகிறது. இது உங்கள் ஸ்மார்ட்போனை இணையத்துடன் இணைக்காமல் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்த உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்