‘4 கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ்’!.. அசரவைக்கும் ‘பேட்டரி திறன்’.. புதுமாடல் ஸ்மார்ட்போனை வெளியிடும் பிரபல நிறுவனம்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சாம்சங் (Samsung) நிறுவனம் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை இந்தியாவில் வெளியிட உள்ளது.

வரும் 25ம் தேதி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்31 (Galaxy M31) என்ற புதிய செல்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சம் என்னவென்றால், 64 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி செகண்டரி சென்சார், 5 எம்பி டெப்த் சென்சார் + 5 எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் 4 கேமாரக்கள் ஸ்மார்ட்போன் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்பிளே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 16,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகவல்களின் அடிப்படையில் இந்த மாடல் ஸ்மார்ட்போன் அமேசான் (amazon) ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SMARTPHONE, SAMSUNG, GALAXYM31

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்