'Work From Home' செய்றவங்க... 'கரெக்டா' பண்றாங்களான்னு 'செக்' பண்ண... 'ஆஃப்' ஒண்ணு கண்டுபுடிச்சுருக்காங்க!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

மேற்கு வங்க மாநிலத்தில் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் ஒழுங்காக பணியாற்றி வருகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டி சாஃப்ட்வேர் ஒன்றை அரசு பயன்படுத்த தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் இந்த பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிடைக்கும் முடிவுகளை பொறுத்து அடுத்தடுத்து துறைகளுக்கும் இந்த சாஃப்ட்வேர் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலை நேரங்களில் பணியாளர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும், அலுவலக நேரத்தில் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டி இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சாஃப்ட்வேர் பயன்படுத்தும் போது அரசு பணியாளர்களுக்கு அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் வழங்கப்படும். அதன் மூலம் வேலையை தொடங்கும் போது அந்த சாஃப்ட்வேர் அரசு ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்கும்.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றும் போது ஊழியர்கள் இந்த முறையை தவறாக யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தில் சளி, இருமல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனவும், மற்றவர்கள் அலுவலகம் வரலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்