Netflix-ஐ புறக்கணித்த இந்தியர்கள்.. அகல பாதாளத்திற்கு செல்லும் பங்கின் விலை.. வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்நெட்ப்ளிக்ஸ் உலக அளவில் பெரிய சரிவை சந்தித்துள்ளது. உலக மார்கெட்டை தாண்டி இந்திய மார்கெட்டில் தான் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
கடுமையான போட்டி:
சமீபத்தில் மாதக் கட்டணத்தை ரூ.199-ல் இருந்து ரூ.149-க்கு குறைத்த பிறகும் புதிய வாடிக்கையாளர்கள் பெரிதாக ஒன்றும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இங்கு இருக்கும் போட்டி OTT தளங்கள் தான் காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு இருக்கும் கேபிள் டிவி கட்டணம் மிகக் குறைந்த விலையில் உள்ளது. அது மட்டுமல்லாமல், Amazon Prime, zee5, voot, Sony Liv உள்ளிட்ட ஒடிடி தளங்கள் நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு கடுமையான போட்டியாக உள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லாக்டவுன் அறிவிக்கப்பட்ட 2020 தொடக்கத்தில் மக்கள் அதிகமாக ஒடிடி தளங்களை பார்க்க தொடங்கினர். அனைவரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் உலகத் திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்க்கும் பழக்கங்கள் அதிகரித்தது. அப்போது தான் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்தது.
மேலும், ஜப்பான் மற்றும் பிரேசில் நாடுகளில் நெட்ப்ளிக்ஸ் சந்தையை அதிகப்படுத்த முனையும் நேரத்தில் இந்தியாவில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து நெட்ப்ளிக்ஸ் Co-CEO கூறும்போது, "இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் orginal content-ஐ மேம்படுத்த முக்கியத்துவம் அளிப்பதாக கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக விளையாட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உலக மார்கெட் எப்போதும் இந்திய மார்கெட்டுக்கு சரிபட்டு வரவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை 508 ரூபாயாக இருந்த பங்கின் விலை முடிவில் 400 ரூபாயாக குறைந்தது. வார இறுதியில் மேலும் சரிவை சந்தித்தது.
அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் உற்பத்தி பொருட்கள் இந்திய சந்தையில் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக ford நிறுவனமும் இந்தியாவில் தோல்வியையே சந்தித்தது. நெட்ப்ளிக்சை பொறுத்தவரையில் இந்தியாவில் வெளியான சில திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் சரியாக போகவில்லை. இதைத்தவிர நிறைய பேர் டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் அனைத்தையும் இலவசமாக பார்ப்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
உலகின் மிக பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமானநெட்ஃப்ளிக்ஸில், தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஹாலிவுட், கொரிய என பல மொழி திரைப்படங்கள், வெப் சீரியஸ்கள் ஆகியவற்றை கண்டுகளிக்க முடியும்.ஓடிடியில் பல திரைப்படங்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர நெட்பிளிக்ஸ் தனது மாத சந்தாக்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Netflix: ‘இனி சின்ராச கையில பிடிக்க முடியாதே’.. வாடிக்கையாளர்கள் மனசு குளிர்ற மாதிரி வந்த ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- 'எவளோ தாராள மனசு பாரேன்'... 'Money Heist வெப் சீரிஸ் பாருங்க'... ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கிய பிரபல இந்திய நிறுவனம்!
- 'Amazon Prime, Netflix' போன்ற OTT தளங்களுக்கு கட்டுப்பாடு'... 'இனிமேல் வெப் சீரிஸில் இது கட்டாயம்'... மத்திய அரசு!
- “வருது.. வருது”.. ‘ஓடிடியில்’ இதுவரைக்கும் இல்லாம இருந்த அந்த விஷயம்.. ‘இப்போ வருது!’ - மத்திய அமைச்சர் அதிரடி!
- ஆஹா..! பீட்சா சாப்பிட்டு ‘நெட்பிளிக்ஸ்’ பார்க்க சம்பளம்.. இந்த ‘வேறலெவல்’ வேலைக்கு ஆட்கள் தேடும் கம்பெனி..!
- கூகுள்... ஆப்பிள்... நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!.. வாயடைத்துப் போன பட்டதாரிகள்!
- 'ஓடிடிக்கு படையெடுக்கும் முன்னணி நட்சத்திரங்கள்'... 'அல்டிமேட் ஆஃபரை அறிவித்துள்ள நெட்ஃபிளிக்ஸ்'... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
- ‘எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு’... ‘திடீரென திருநம்பியாக மாறிய’... ‘பிரபல ஹாலிவுட் நடிகை’... ‘வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்’!!!
- 'விஜய் ஃபேன்ஸ்-க்கு ஒரு ஹாட் அப்டேட்...' 'மாஸ்டர்' திரைப்படம் எதில் வெளியாகிறது...? - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு...!
- 'படங்கள், சீரிஸ்னு எல்லாமே FREEஆவே பாக்கலாம்?!!'... 'எப்போனு தெரியுமா???'... 'பிரபல ஸ்ட்ரீமிங் தளத்தின் செம்ம அறிவிப்பு!!!'...