பூமிக்கு குட்பை சொன்ன Artemis 1 ராக்கெட்.. நாசா-வின் மிரளவைக்கும் வீடியோ.. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் கிடைத்த வெற்றி..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வரலாற்றின் சக்திவாய்ந்த ராக்கெட் என்று அழைக்கப்படும் ஆர்டெமிஸ் 1 இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா. முன்னதாக கடந்த 1969 ஆம் ஆண்டுவாக்கில் அப்போல்லோ II  திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது. ஆண்டுகள் பல கடந்த நிலையில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இறங்கியது நாசா. இதற்காகவே ஆர்டெமிஸ் எனும் ராக்கெட்டை நாசா உருவாக்கியது.

முன்னைக்காட்டிலும் துல்லியமாக நிலவை ஆராய இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஆர்டெமிஸ் ராக்கெட்டை ஏவ நாசா நினைத்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்தது. பின்னர் அமெரிக்காவில் வீசிய இயான் சூறாவளி காரணமாக ஆர்டெமிஸ் ராக்கெட் ஏவுதல் கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று இந்திய நேரப்படி நண்பகல் 12:17 மணி அளவில் இந்த ராக்கெட் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

இதன்மூலம் சுமார் 50 ஆண்டுகள் கழித்து, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசா முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த ராக்கெட்டில் ஓரியான் கேப்ஸ்யூல் பொருத்தப்பட்டிருக்கிறது. இது, நிலவின் மற்றொரு பகுதியில் இருந்து பூமியை நோக்கி அனுப்பப்படும். இந்த ஓரியான் கேப்ஸ்யூல் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் விழும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுபற்றி பேசிய நாசா நிர்வாகி பில் நெல்சன்," இந்த திட்டம் சந்திரனுக்குச் செல்வதற்காக மட்டும் அல்ல. மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்குத் தயாராகும் வகையிலும் சந்திரனில் எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்வதற்காகவும் மீண்டும் நிலவு பயணத்தை துவங்கியுள்ளோம். இது ஆர்டெமிஸ் தலைமுறை" என்றார்.

இதனிடையே, ஆர்டெமிஸ் ராக்கெட் பூமிப்பரப்பை விட்டு வெளியேறும் போது எடுக்கப்பட்ட வீடியோவை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த பிரமிக்கவைக்கும் வீடியோவில் பூமி தெளிவாக காட்சியளிக்கிறது.

 

NASA, ARTEMIS I, MOON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்