இதென்ன 'ஆட்டோவா? வீடா?' .. 'படிச்சதை' அப்ளை பண்ணி, 'அசத்திய' நாமக்கல் 'என்ஜினியர்'!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

கல்வியாக கற்றதை, நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுத்துவதற்கான அறிவியலாக மாற்றுவதே பொறியியலின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்துள்ளார் பொறியியல் பட்டதாரி ஒருவர்.

ஆம், நாமக்கலைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அருண் பிரபு என்பவர், ஆட்டோ ஒன்றை நடமாடும் நவீன வீடாக மாற்றி வடிவமைத்து அசத்தியுள்ளார். நகர்ந்து நகர்ந்து மக்கள் கூட்டம் புலம் பெயர்ந்து ஓரிடத்தில் கூட்டாக தங்களுக்கான வாழ்வியலை அமைத்துக்கொள்வார்கள். அந்த இடமே நகரம் என்றழைக்கப்படுகிறது.

அப்படியான நகரத்திற்கு வருபவர்கள் முதலில் சந்திக்கும் நெருக்கடியே வீடுதான். வீட்டை கட்டுவதற்கான இடம், நிலம் அதுவும் நகரின் மையப்பகுதிக்குள் வீடு அமைவது என பல வகையிலும் இதில் சிரமங்கள் உள்ளன. அப்படியான வீடுகளும் பேரிடர் காலங்களில் பெரும் அழிவுகளை சந்திக்க நேரிடுகிறது.

இவற்றை எல்லாம் களைவதற்காக 1 லட்சம் ரூபாய் மதிப்பில் சமையல் அறை, கழிவறை, துணி துவைக்கும் மற்றும் உலர்த்தும் இடம், மொட்டை மாடி உள்ளிட்ட பல வசதிகளுடன் சூரிய சக்தி மின்சார வசதியுடன் கூடிய வீடாக ஆட்டோவை மாற்றி வடிவமைத்துள்ளார் அருண் பிரபு. வீடற்ற ஏழைகளுக்கும் சிறுகுறு தொழில்களைச் செய்துகொண்டு அடிக்கடி இடம் பெயரும் மக்களுக்கும் இந்த வீடு பயனுள்ளதாக இருக்கும் என்று அருண் பிரபு குறிப்பிடுகிறார்.

பொறியியல் படித்தால் வேலை கிடைப்பதில்லை என்கிற கருத்து பரவலாக இருக்கும் சூழலில், ஆர்வத்துடனும், முழு ஈடுப்பாட்டுடனும் பொறியியலை கற்றால், அவற்றை நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுத்தி, சாதிக்கலாம் என்பதற்கு அருண்பிரபு ஒரு உதாரணம்.

HOUSE, AUTO, ENGINEERING, NAMAKKAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்