ஏன் 'கேண்டி கிரஷ்' நிறுவனத்தை ரூ.5 லட்சம் கோடி கொடுத்து மைக்ரோசாஃப்ட் வாங்குகிறது? சத்யா நாதெல்லா விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஆக்டிவிசன் பிளிசார்ட் (Activision Blizzard) என்ற கேமிங் தயாரிப்பு நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் பல பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கேமிங் நிறுவனத்தை கையகப்படுத்தும் மைக்ரோசாஃப்ட்:
உலகளவில் பிரபலமான நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது ஒரு கேமிங் நிறுவனத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆக்டிவிசன் பிளிசார்ட் (Activision Blizzard) என்ற கேமிங் தயாரிப்பு நிறுவனத்தை தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க இருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இதுதான் மைக்ரோசாஃப்ட் நிறுவன வரலாற்றிலேயே மிகப் பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த ஒப்பந்தம் வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெடாவெர்ஸ் தளத்தில் நுழைய உதவும்:
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் குறிவைத்திருக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு உலகின் பிரபல வீடியோ கேம்களான கால் ஆஃப் டியூட்டி, வார்கிராஃப்ட், ஓவர் வாட்ச் போன்ற கேம்களின் உரிமைகள் கிடைத்துவிடுமாம். இது மெடாவெர்ஸ் தளத்தில் நுழையவும் படிப்படியாக இது உதவும் என்றும் கூறியுள்ளது.
சமீபத்தில் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'பெதெட்சா' என்கிற கேமிங் நிறுவனத்தை 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
கிளவுட் சேவைகளில் முதலீடு செய்கிறோம்:
இதுக்குறித்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா கூறும் போது 'நாங்கள் புதிய கேமிங் சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் விதத்தில், விளையாடுபவர்கள், கேமிங் வடிவமைப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், கேமிங்கை பாதுகாப்பானதாக மாற்றவும் உலகத் தரத்திலான உள்ளடக்கங்கள், கேமிங் சமூகம், கிளவுட் சேவைகளில் முதலீடு செய்கிறோம்' எனக் கூறியுள்ளார்.
மைக்ரோசாஃப்டின் சமீபத்திய தலைமுறைகள் கன்சோல்களை விடவும், பிளே ஸ்டேஷன் 5-ன் விற்பனை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு 2021ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் கேம்ஸ் ஸ்டுடியோவான பெதெட்சாவை வாங்கியபோது, ஃபால் அவுட் மற்றும் ஸ்கைரிம் போன்ற பிரான்சைஸிகள் மற்ற தளங்களுக்கு தொடர்ந்து கேம்களை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனித்தனியாக செயல்படும்:
ஆனால், தற்போது வெளிவரவிருக்கும் 'ஸ்டார்ஃபீல்ட்' மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரத்தியேகமாக வெளியீடாக இருக்கப் போகிறது. ஒப்பந்தம் நிறைவடையும் வரை, ஆக்டிவிஷன் பிளிசார்ட் மற்றும் மைக்ரோசாஃப்ட் கேமிங் ஆகியவை தனித்தனியாக தொடர்ந்து செயல்படும் என ஃபில் ஸ்பென்சர் தன் சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பாபி கோடிக் என்பவர் ஆக்டிவிஷனின் தலைமைச் செயல் அதிகாரியாக தொடர்வார் எனவும், மைக்ரோசாட் மற்றும் ஆக்டிவிசன் பிளிசார்ட் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் நிறைவடைந்த பின், ஆக்டிவிசன், வியாபார ரீதியில் மைக்ரோசாஃப்டின் கீழ் செயல்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
தங்களின் கேம் பாஸ் சேவைக்கான கையகப்படுத்தல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து, மைக்ரோசாஃப்ட் தரப்பு உற்சாகமாக உள்ளது. தங்களால் முடிந்த வரை எத்தனை ஆக்டிவிசன் பிளிசார்ட்டின் கேம்களை, எக்ஸ் பாக்ஸ் கேம் பாஸ் மற்றும் பிசி கேம் பாஸில் கொடுக்க முடியுமோ, அத்தனை கேம்களைக் கொடுப்போம் எனவும் உற்சாமாக தெரிவித்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
மற்ற செய்திகள்
ஜெயிக்குறமோ, தோக்குறமோ.. மொதல்ல சண்டை செய்யணும்.. அதுக்கு இந்த பையன் தாங்க உதாரணம்.. ஏன் தெரியுமா..?
தொடர்புடைய செய்திகள்
- 'உலகத்தை' ஆளப்போகும் Metaverse...! - கூகுளும், பேஸ்புக்கும் உருவாக்கப் போகும் மாய உலகம்!
- 'தடுப்பூசி போட்டாச்சா'?... 'அப்போ கையோட இத கொண்டு வாங்க'... பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!
- ஐடி ஊழியர்கள் ஷாக்!.. வெறும் 4 பேரை வைத்து... அமெரிக்க பெரு நிறுவனங்களை நடுங்கவைத்த சீனா!.. "மைக்ரோசாஃப்ட் நிறுவனம் HACKED"!
- 'எல்லாருக்கும் 1.1 லட்ச ரூபாய் போனஸ்'... 'இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல ஐடி நிறுவனம்'... கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!
- யாருமே கண்டுபிடிக்காத சின்ன மிஸ்டேக் தான்...! 'கண்டிபிடிச்சு சொன்னதால இளம்பெண்ணிற்கு அடித்த ஜாக்பாட்...' - மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு...!
- எனக்கு 'coding' ரொம்ப புடிக்கும்...! 'அந்த ஒரு' வார்த்தைக்காக பெரிய கம்பெனிகள் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க...' - வந்த எல்லார விடவும் 'சேலரி பேக்கேஜ்' இவங்களுக்கு தான் அதிகமாம்...!
- ‘முடிவுக்கு வந்த 27 ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கை’!.. விவாகரத்தை அறிவித்தார் பில் கேட்ஸ்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய ‘ட்விட்டர்’ பதிவு..!
- புரியுது...! 'ரொம்ப மன உளைச்சலா இருப்பீங்க...' 'அதனால ஒரு பரிசு கொடுக்க போறோம்...' - வேற லெவல் ஆஃபர் அளித்த பிரபல ஐடி நிறுவனம்...!
- 'என்னையே வேலைய விட்டு தூக்கிட்டீங்கல...' 'என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க...' 'பல மாசமா ராத்திரி பகலா திட்டம் போட்டு...' - பிரபல நிறுவனத்தை பழிவாங்க செய்த அதிர்ச்சி காரியம்...!
- ‘ஒரு மிஸ்டேக் இருக்கு’!.. மைக்ரோசாப்ட்டை அலெர்ட் பண்ணிய ‘சென்னை’ இன்ஜினீயர்.. அடித்த ‘ஜாக்பாட்’!