'48 மெகா பிக்ஸல் கேமரா, அசத்தலான பேட்டரி'... 'ரீ என்ட்ரி கொடுக்கும் Micromax'... வாடிக்கையாளர்களை தனது பக்கம் இழுக்குமா?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

இந்தியாவில் மொபைல் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் எண்ணம் பெரிய டிஸ்பிளே, சிறந்த கேமரா தரம் மற்றும் அதிக நேர பேட்டரி பேக்கப் இருக்கவேண்டும் என்பதே முக்கிய விருப்பமாக இருக்கும். இவற்றை எல்லாம் மனதில் வைத்து Micromax தனது புதிய மொபைலை வெளியிட உள்ளது.

Micromax In Note 1 இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் இணையதளத்தில் வெளியாகிறது.  64ஜிபியானது 10,999 ரூபாயாகவும், 128 ஜிபியானது 12,499 ரூபாயாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் MediaTek Helio G85 புராசெஸ்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளதால் நீண்ட நேரம் சார்ஜ் இருக்கும் வகையிலும், உடனடியாக சார்ஜ் ஏறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. In என்ற லோகோவுடன் ஸ்டைலிஷ் தோற்றத்துடன் வெளியாகும் இந்த மொபைல், Micromaxக்கு ரீ என்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மொபைல், பெரிய டிஸ்பிளே, சிறந்த கேமரா என இந்தியர்களைக் கவரும் பல அம்சங்களை கொண்டுள்ளது. 6.67 இஞ்ச் கொண்ட டிஸ்பிளே மற்றும் அதன் விலையை சந்தையில் உள்ள மற்ற மொபைல் போன்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இது நிச்சயம் பெரிய போனாக இருக்கும் என கூறப்படுகிறது. HD ரெசொலேஷன்ஸ் கிளாரிட்டியை இந்த கேமரா வழங்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், பெரிய டிஸ்பிளே கொண்ட போனை ஒருகையில் வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.

C டைப் யூஎஸ்பி போர்ட். 4ஜிபி ரேமில் கிடைக்கும் இந்த போன் இரண்டு வகை ஸ்டோரேஜ் மாடல்களை கொண்டுள்ளது. அதன்படியே விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேமராவை பொருத்தவரை 48 மெகா பிக்ஸல் பிரைமரி கேமரா, 5 மெகா பிக்ஸல் அல்ட்ரா-வைட் கேமரா, 2 மெகா பிக்ஸ்ல் மேக்ரோ கேமரா மற்றும் 2 பிக்ஸல் டெப்த் சென்சார் கேமராவை கொண்டுள்ளது. பார்ப்பதற்குப் பளபளப்பான லுக்கில் இருக்கும், Micromax In Note 1 வாடிக்கையாளர்களைக் கவருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மற்ற செய்திகள்