Video: “இது என் கடைசி ஆசைனு சொன்னார்”.. இறந்து போன மனைவியை ‘இப்படி’ பார்த்ததும் பீறிட்டு அழுத கணவர்!’.. மனதை உருக்கும் நெகிழ்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

தொழில்நுட்பத்தால் உறவுகளையும் உணர்வுகளையும் கூட மீட்டெடுக்கும் அபாரமான வளர்ச்சி தற்போது சாத்தியமாகியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது தென்கொரியாவில் நடந்துள்ள இந்த நெகிழ்ச்சியான சம்பவம்.

தென்கொரியாவில் Kim Jung Soo எனும் 57 வயதானவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இறந்து போய்விட்டார். ஆனால் தற்போது தொழில்நுட்ப வசதியுடன் விர்சுவல் ரியாலிட்டி என்கிற முறையின் மூலம் இறந்து போன தன் மனைவியை சந்தித்துள்ளார் Kim Jung Soo.

தென்கொரியாவின் MBC எனும் சேனல் ஆவணப்படங்களை தமது தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் நமக்கு பிரியமானவர்கள் இறந்திருந்தால் அவர்களை விர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக மீண்டும் சந்திக்க வழிவகை செய்யப்படுகிறது. இந்நிலையில்தான் நீண்ட நாட்களாக நோயினால் உயிர் பிரிந்த தன் மனைவியை ஆவணப்படத்தின் துணையுடன்  Kim Jung Soo சந்தித்துள்ளார்.

தன் மனைவியை  Kim Jung Soo சந்திக்கும்போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியுள்ளது. அவரது உருக்கமான அந்த நிகழ்வு அந்த ஆவணப் படத்தை பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் எல்லோர் மனதையும் கலங்கச் செய்துள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரிக்க  MBC சேனலுக்கு ஆறு மாதக் காலம் தேவை பட்டதாக படக்குழு கூறுகிறது. இதன் மூலமாக  Kim Jung Soo தனது மனைவியுடன் நடனமும் ஆடியுள்ளார்.

அம்மாவுக்கு அப்பா எப்போதுமே தன் அன்பை முத்தங்கள் கொடுத்து வெளிப்படுத்துவார். அதுமட்டுமின்றி அம்மா நோயினால் பாதிப்புக்கு ஆளான பிறகும் அப்பா அம்மாவை மிகவும் அக்கறையோடு பார்த்துக் கொண்டார். அம்மாவுக்கு முடியெல்லாம் கொட்டிய போதும் கூட அம்மா மிகவும் அழகாக இருப்பதாக அப்பா கூறுவார் என Kim Jung Soo-ன் இரண்டாவது மகள் Jong-bin கூறுகிறார். அத்துடன், “இது என் கடைசி ஆசை”Kim Jung Soo கூறியதால், மனமுருகி இந்த ஏற்பாட்டினை செய்ததாக Jong-bin தெரிவிக்கிறார். இந்த யூடியூப் வீடியோ 8 லட்சம் வியூஸ்களை கடந்துள்ளது.

ALSO READ: “எல்லார் வாழ்க்கையும் நொறுங்கிடுச்சு!”.. ஐந்தாவதாக மெய்க் காப்பாளருடன் திருமணம்! நடிகையை வசைபாடிய முன்னாள் காதலி!

ஏற்கனவே Jang Ji-sung எனும் தாய், hemochromatosis எனும் நோயால் இறந்துபோன தமது 7 வயதேயான Nayeon எனும் மகளை இதே முறையில் தரிசித்தார். அதுதான் இந்த சேனலின் முதல் ஆவணப்படம். இந்நிலையில் இப்போது இந்த 2வது ஆவணப்படம்  உருவாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்