‘தந்தை இறந்து’.. ‘7 வருடம் ஆன பின்னும்’.. ‘கூகுள் எர்த்தில் தேடிய மகனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!’.. நெகிழ வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைய உலகில் யாவும் சாத்தியம் ஆகியுள்ளது.

விர்ச்சுவல் கூகுள் எர்த் மூலம் பூமியின் மேற்பரப்பில் துல்லியமாக, செயற்கைக்கோள் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதற்கு கூகுள் எர்த் என்று பெயர் சொல்கின்றனர். இந்த கூகுள் எர்த் பயன்பாடு மூலம் பூமியில் வசிப்பவர்களின் ஒவ்வொரு தெருவும் வீடும் கூட கூகுள் மூலமாக பார்க்க முடியும்.

ALSO READ: “ஏறுனதுமே இப்படி இருக்கு.. பிரார்த்தனை பண்ணிக்கங்கனு சொன்னா!” - கடலில் விழுந்த விமான பயணிகளின் உறவினர்களின் கதறல் ஓலம்!

இந்த கூகுள் எர்த் மூலம் விர்ச்சுவலாக ஒரு தெருவுக்குள் நாம் கணினி முன் அமர்ந்தபடியே சென்று ஒரு வீட்டின் வாசல் வரை காணமுடியும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி அந்தத் தெருக்களில் ஒரு ஆள் நடந்து செல்வதைப் போலவே நாம் முழுமையான 360 டிகிரி அனுபவத்தை பெற முடியும். இந்தப் பயன்பாட்டை உலக அளவில் பலரும் பயன்படுத்துவதும் ரசிப்பதும் உண்டு. இப்படி பயன்படுத்தும்போது பலரும் ஏற்கனவே எடுக்கப்பட்ட  தங்களுடைய வீட்டின் புகைப்படங்கள் கூகுள் எர்த்தில் காணமுடியும்.

இந்த கூகுள் எர்த் பயன்பாடு மூலம் உலக அளவில் பல நெகழ்ச்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அப்படி ஒரு சம்பவம் தான் ஜப்பானில் ஒருவருக்கு நிகழ்ந்துள்ளது. சுமார் 7 வருடங்களுக்கு முன்பு ஒருவரின் தந்தை இறந்த போகிறார். இறந்து போன தனது அப்பாவின் போட்டோவை கூகுள் எர்த் பயன்படுத்தும் போது மகன் அதை பார்த்திருக்கிறார்.‌

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த கொரோனா தொற்றுநோய் சூழலில் செய்வதற்கு ஒன்றுமில்லை. பெற்றோரின் வீட்டை கூகுள் எர்த் மூலம் சென்று பார்க்க முடிவு செய்து தேடி பார்த்திருக்கிறார். அப்படி காணும் போதுதான் சுமார் 7 வருடங்களுக்கு முன்பாக இறந்து போன தந்தையின் புகைப்படம் கூகுள் எர்த்தில் இருந்துள்ளது. அதில் இவருடைய தந்தை அங்கு நிற்பதையும் இவருடைய அம்மா வரும்வரை இவருடைய தந்தை காத்துக் கொண்டிருப்பதையும் இவரால் பார்க்க முடிகிறது. தாய் வரும்வரை அமைதியாக தன் கனிவான தந்தை காத்துக் கொண்டிருந்தார் என்று அவர் இந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உண்மையை சொல்லப் போனால் 7 வருடங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்பொழுது கூகுள் எர்த் மூலம் அந்த தெருவில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. அதில் இந்த நபரின் தாயும் தந்தையும் பதிவாகியுள்ளனர். தந்தையின் அந்த வீட்டைப் பார்க்கும் பொழுது இந்த புகைப்படம் காண்பித்ததால் இந்த நபர் இப்போது பரவசம் அடைந்து இருக்கிறார்.

ALSO READ: “சாவோடு சடுகுடு ஆடுவோர்.. மரணத்தோடு மங்காத்தா ஆடுவார்.. எமனை லெமன் மாதிரி புழிஞ்சு வீசுவார்!” - ரஜினியைப் புகழ்ந்த ‘பிரபல திரைப்பட’ இயக்குநர்!

இவருடைய இந்த ட்வீட் பதிவிட்ட பின்னர் உடனடியாக 6.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். கூகுள் எர்த்தில் இருந்து இந்த புகைப்படங்களை அகற்ற வேண்டாம் என்றும் இந்த நபர் கோரிக்கையும் வைத்திருக்கிறார். இப்படி மக்கள் தங்களுடைய ஊர், தெருக்கள் மற்றும் வீடு என தங்களுக்கு பிடித்தமான பகுதிகளை கூகுள் எர்த் மூலம் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்