'தீபாவளி' அதிரடி.. அடுத்தடுத்து 'ஆபர்களை'.. அள்ளி 'வழங்கிய' ஜியோ.. விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் என்ற அறிவிப்பால் வாடிக்கையாளர்களை அந்நியனாக மாற்றிய ஜியோ தற்போது ஆபர்களை அள்ளி வழங்க ஆரம்பித்துள்ளது. வரும் தீபாவளி பண்டிகையொட்டி ஜியோ மூன்று முத்தான ஆபர்களை அளித்துள்ளது. அது என்னவென்பதை கீழே பார்க்கலாம்.

ஜியோ போன்

சுமார் 1500 ரூபாய் மதிப்புள்ள ஜியோ போனை தீபாவளி ஆபராக வெறும் 699 ரூபாய்க்கு ஜியோ வழங்குகிறது. இந்த புதிய ஜியோ போன்களை வாங்கி உபயோகிக்கும் போது, குறைந்த பட்சம் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 700 ரூபாய் மதிப்பிலான டேட்டா இலவசமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் உங்களின் முதல் ஏழு ரீசார்ஜ்களுக்கு ஜியோ 99 ரூபாய் மதிப்புள்ள இலவச டேட்டா சேவைகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

ஐயூசி டாப் அப்

ஜியோ போனை பயன்படுத்துபவர்கள் தவிர மற்றவர்கள் ஐயூசி டாப் அப்களை பெற்றுக்கொள்ள முடியும். சுமார் 10 ரூபாய் முதல் 1000 ரூபாய் இந்த டாப் அப்கள் கிடைக்கின்றன. இதில் 10 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் ஜியோ அல்லாத மற்ற போன்களுக்கு 124 நிமிடம் வாய்ஸ்கால்கள் கிடைக்கும். இதுதவிர 1 ஜிபி டேட்டா உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதுவே நீங்கள் நூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 1632 நிமிட வாய்ஸ்கால்களும் 10 ஜிபி டேட்டாவும் இலவசமாக கிடைக்கும்.

எல்லாமே கிடைக்கும்

இந்த புதிய டாப் அப் பிளான்களை சில நாட்களுக்கு முன்தான் ஜியோ அறிமுகம் செய்தது. அதன்படி  222 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 56 ஜிபி டேட்டா மற்றும் பிற மொபைல்களுக்கு முதல் 1000 நிமிடங்கள் இலவசமாக பேச முடியும். தினசரி 100 எஸ்.எம்.எஸ்-கள் இலவசம். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.இதுவே 333 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 112 ஜிபி டேட்டா மற்றும் பிற மொபைல்களுக்கு முதல் 1000 நிமிடங்கள் வரை இலவசமாக பேச முடியும். தினசரி 100 எஸ்.எம்.எஸ்-கள் இலவசம். இதன் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

நீங்கள் 444 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 168 ஜிபி டேட்டா மற்றும் பிற மொபைல்களுக்கு முதல் 1000 நிமிடங்கள் வரை இலவசமாக பேச முடியும். தினசரி 100 எஸ்.எம்.எஸ்-கள் இலவசம். இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த புதிய பிளான்களை பொறுத்தவரை இலவச வாய்ஸ் கால்களுக்கு பிறகு, நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்றும், தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் இலவச எஸ்.எம்.எஸ்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்