சத்தம் இல்லாம.. 'ரெண்டு' திட்டங்களை 'தூக்குன' ஜியோ.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் போட்டியில் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் ஆகியவற்றுக்கு இடையே கடும் சண்டை நிலவி வருகிறது.இந்தநிலையில் சத்தம் இல்லாமல் இரண்டு குறைந்த விலை ரீசார்ஜ்களை ஜியோ நிறுவனம் நீக்கியுள்ளது. முன்னதாக ரூ.19 மற்றும் ரூ 52 என இரண்டு குறைந்த விலை ரீசார்ஜ்களை ஜியோ வைத்து இருந்தது.
இதில் 19 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாள் வேலிடிட்டியுடன் 150 MB 4ஜி டேட்டா, 20 எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகியவற்றை வழங்கியது.ரூ.52-க்கு ரீசார்ஜ் செய்தால் 7 நாளுக்கு 1.05 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 70 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கியது. தற்போது இந்த இரு திட்டங்களையும் ஜியோ நீக்கிவிட்டது.
வாடிக்கையாளர்கள் ஐ.யூ.சி டாப்-அப்களுடன் சேர்ந்து சாசெட் பேக்குகள் எனப்படும் குறைந்த விலை ரீசார்ஜ்களை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதால், ஜியோ நிறுவனம் இதை நீக்கியுள்ளதாக தெரிகிறது. தற்போது ஜியோ மினிமம் ரீசார்ஜ் ஆக 98 ரூபாயை நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தில் 2 ஜிபி 4 ஜி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்குகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரு காலுக்கு '52 பைசா' நஷ்டம்.. ஏர்டெல், வோடபோன்-க்கு 'அபராதம்' போடுங்க.. 'கதறும்' ஜியோ!
- ‘மாசத்துக்கு 12 ரூபாய் தான்’.. ‘6 பைசா சர்ச்சை’ ஜியோ சொன்ன புது விளக்கம்..!
- ஒரே காசுல 'ரெண்டு' லட்டு.. 42 பதிலா 84 ஜிபி... 'Double Data' சலுகையை 'அறிவித்த' நிறுவனம்.. ஜியோவுக்கு செம போட்டி!
- அந்த '6 பைசா'வுக்கு நீங்க தான் காரணம்.. உங்கள மாதிரி 'ஏமாத்த' மாட்டோம்.. செம சண்டை!
- ‘இனி ரொம்ப நேரம் காத்திருக்க தேவையில்ல’ ‘உலகிலேயே முதல்முறையாக’.. ஜியோவின் அடுத்த அதிரடி..!
- இந்த தேதிக்கு முன்னாடி ரீசார்ஜ் பண்ணீங்களா..? ‘அப்போ உங்களுக்கு 6 பைசா கட்டணம் கிடையாது’ ஜியோ அறிவுப்பு..!
- ‘ஒரு நாளைக்கு 1 GB மட்டும் இல்ல’.. ‘அதுக்கும்மேல ஆனா அதே விலையில’ பிரபல நெட்வொர்க் -ன் அதிரடி அறிவிப்பு..!
- 'திட்டி தீர்த்த நெட்டிசன்கள்'... 'புதிய அதிரடி ஆஃபரை அறிவித்த ஜியோ'...வாடிக்கையாளர்களை கவருமா?
- ஜியோ, ஏர்டெல், வோடபோனுக்கு 'செம' போட்டி.. களத்தில் 'குதித்த' நிறுவனம்!
- ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல், வோடஃபோன்..! வெளியான அதிரடி அறிவிப்பு..!