'ஜியோவின் சுதந்திர தின அதிரடி ஆஃபர்'... 5 மாதங்களுக்கு இதெல்லாம் இலவசம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோவில் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

ஜியோவில் ஜியோஃபை (JioFi) வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் விதமாகச் சுதந்திர தின ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி 1,999 ரூபாய்க்கு ஜியோஃபை ஹாட்ஸ்பாட் கிடைக்கிறது. இதற்கு 5 மாதங்கள் இலவச டேட்டாவும், ஜியோ டு ஜியோவுக்கு இலவச வாய்ஸ்கால்களும் வழங்கப்படுகிறது. இதில் முக்கியமாக வாடிக்கையாளர்கள் ஜியோஃபை வாங்கியவுடன் ஏற்கனவே அமலில் இருக்கும் பிளான்களைத் தேர்வு செய்ய வேண்டும். ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் ஜியோஃபை ஹாட்ஸ்பாட் வாங்கியவுடன், அதற்கான ஜியோ சிம் ஆக்டிவேட் செய்யப்படும். பின்பு, ஏற்கனவே உள்ள மூன்று பிளான்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

அடிப்படை பிளான் 199 ரூபாய்க்கு ஆரம்பமாகிறது. இதில் 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. கூடுதலாக 99 ரூபாய் செலுத்தினால் ஜியோ பிரைம் சந்தாதாரராக மாறலாம். இவ்வாறு மாறுபவர்களுக்கு, ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடேட் வாய்ஸ்கால், ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடங்கள் வாய்ஸ்கால் ஆகியவை 28 நாட்களுக்கு கிடைக்கின்றன. மேலும், 140 நாட்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்ஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.

இதற்கு அடுத்ததாக 249 ரூபாய்க்கு இரண்டாவது பிளான் உள்ளது. இதில் தினமும் 2ஜிபி டேட்டா, வீதம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த பிளானோடு 99 ரூபாய் செலுத்தி பிரைம் வாடிக்கையாளராக மாறுபவர்களுக்கு, ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடேட் வாய்ஸ்கால், ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடங்கள் வாய்ஸ்கால் ஆகியவை 28 நாட்களுக்கு கிடைக்கின்றன. மேலும், 112 நாட்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்ஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.

மூன்றாவது பிளானான 349யில் அதிகபட்ச டேட்டா ஆஃபர் கிடைக்கிறது. 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பிளானில் 99 ரூபாய் செலுத்தி பிரைம் வாடிக்கையாளராக மாறுபவர்களுக்கு, ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடேட் வாய்ஸ்கால், ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடங்கள் வாய்ஸ்கால் ஆகியவை 28 நாட்களுக்கு கிடைக்கின்றன, மேலும், 84 நாட்களுக்குத் தினசரி 100 இலவச எஸ்எம்ஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்