‘அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்’.. ‘ரொம்ப மலிவான விலையில்’.. அசர வைத்த ஜியோவின் புது அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஃபைபர் பயனாளர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜியோ ஃபைபர் சேவையானது இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில், சந்தையில் மக்களிடம் கவனத்தை ஈர்க்க சற்று தவறிவிட்டது. அதனால் ஃபைபர் பயனாளர்களுக்கு அவ்வப்போது சில சலுகைகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ரூ.351, ரூ.199 என்ற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.351 திட்டமானது அதிக டேட்டா மற்றும் வேகத்தை விரும்பாத பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாதம் 50GB டேட்டா வழங்கப்படுகிறது. இணைய வேகம் 10Mbps என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50GB டேட்டா வரம்பு முடிந்த உடன் 1Mbpsஆக குறையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் இலவச வாய்ஸ் கால்களை பயனர்கள் பெறுவார்கள்.

இது தவிர காம்ப்ளிமென்டரி வீடியோ காலிங் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளர்கள் இந்த திட்டத்தை 3 மாதம், 6 மாதம் என தங்களுக்கு விருப்பமான சந்தாவை தேர்வு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.199 திட்டத்தில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா 7 நாட்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டேட்டா வேகம் 100Mbps என கூறப்பட்டுள்ளது. இதிலும் காம்ப்ளிமென்டரி வீடியோ காலிங் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIO, JIOFIBER, RECHARGE, PREPAID, RELIANCEJIO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்