டிவிட்டர் சிஇஓ ‘திடீர்’ முடிவு..? அமெரிக்காவில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி தனது பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் சிஇஓ ‘திடீர்’ முடிவு..? அமெரிக்காவில் பரபரப்பு..!
Advertising
>
Advertising

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரிகளாக உள்ளவர் ஜாக் டோர்சி (Jack Dorsey). இவர் Square Inc என்ற மற்றொரு கம்பெனிக்கும் தலைமை பொறுப்பில் உள்ளார்.

சமீபத்தில் கிரிப்ட்டோகரன்சி மீது அதிக நாட்டம் உள்ளதாக ஜாக் டோர்சி கூறி இருந்ததாக CNBC ஊடகம் குறிப்பிட்டிருந்தது. அதனால் ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களை சரியாக கவனிக்க முடியுமா? என்று ஜாக் டோர்சி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அதனால் டிவிட்டர் சிஇஓ பதவியில் இருந்து  ஜாக் டோர்சி விலக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TWITTER, JACKDORSEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்