WATCH VIDEO: ‘நிஜ அயர்ன் மேன் இவர் தானோ’... ‘சீறிப் பாய்ந்து சாகசம் புரிந்த இளைஞர்’... 'ஜெட் பேக் இயந்திரம் மூலம் நடந்த அதிசயம்'!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்அயர்ன் மேனை போன்று தரையில் இருந்து உயரே பறக்கும் தனி மனித ஜெட் விமானத்தின் சோதனை ஓட்டம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அயர் மேன் திரைப்படத்தில், டோனி ஸ்டார்க் பறந்து சென்று உதவும் காட்சிகள் அனைவர் மனதிலும் அயர்ன் மேன் போன்று பறக்கும் ஆசையை ஏற்படுத்தியிருக்கும். இந்த ஆசையை சாத்தியப்படுத்த முடியுமா என்பதை, தனி மனிதர்கள் பறக்க உதவும் ஜெட் ஆடைகளை அவ்வப்போது பல நிறுவனங்கள் சோதித்து வருகின்றன. இந்நிலையில் துபாயில் நடைபெறும் ‘துபாய் எக்ஸ்போ 2020’ -ஐ முன்னிட்டு தனி மனித விமானம் சோதனை ஓட்டம் புகழ்பெற்ற ஜுமேரா கடற்கரையில் நடந்தது.
இதில் ஜெட் விமானங்களை தயாரிக்கும் ‘ஜெட்மேன்' எனும் நிறுவனம் தயாரித்த கார்பன் பைபர் ஜெட்சூட்டை, வின்ஸ் ரெஃபெட் (34) எனும் விமானி அணிந்துகொண்டு, முதல்முறையாக தரையில் இருந்து செங்குத்தாக மேலே பறந்தார். 8 விநாடிகளில் 100 மீட்டர், 12 விநாடிகளில் 200 மீட்டர், 19 விநாடிகளில் 500 மீட்டர், 130 விநாடிகளில் 1,000 மீட்டர் உயரத்தை அவர் எட்டினார். சுமார் 3 நிமிடங்களில் அவர் 1,800 மீட்டர் (சுமார் 6,000 அடி) உயரத்தை அடைந்தார்.
மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்தார். அவர் முதுகில் அணிந்திருந்த ஜெட் இயந்திரங்கள் மூலம் மணிக்கு 400 கி.மீ. வேகத்தை கூட எட்ட முடியும். மனித விமான ஆராய்ச்சியில் மேலும் முன்னேறினால், அயர்ன் மேன் கதாபாத்திரம் விரைவில் நிஜமாகிவிடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video: 'மாயமாகி' 1 ஆண்டுக்குப்பின்... மீண்டுவந்த 'பேய்க்கப்பல்'... யாரும் கிட்ட போகாதீங்க... கடும் எச்சரிக்கை!
- தம்பி! இந்த புறாவுக்கே 'பெல்' அடிக்கிறவன்னுரு சொல்வாங்களே... அது நீங்கதானா?... 'வேற' லெவல் வீடியோ!
- VIDEO: 'ஷாப்பிங் மாலில் இலவச உணவு வாங்குவது எப்படி?'... போற போக்குல... 'என்னடா இது சின்னப்புள்ள தனமா இருக்கு!'... வைரல் வீடியோ!
- VIDEO: ‘அம்மா இருக்கேன் பயப்படாதே’!.. நெட்டிசன்களை உருக்கிய ‘தாய்பாசம்’.. வைரல் வீடியோ..!
- 'டாப் 100' வலைதளங்களின் பெயர்கள் 'வெளியீடு'... முதல் இடத்தை தலைவன் 'கூகுள்' பிடித்துள்ளார்.. அடுத்த 9 'வலைதளங்கள்' குறித்த 'தகவல்கள்' உள்ளே...
- 'ஃபேஸ்புக் மூலம்... நிதி திரட்டி... ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலர்கள்... குவியும் பாராட்டுகள்!'
- Video: ஆசைப்பட்டு 'தெரியாம' பண்ணிட்டோம்... அதுக்குன்னு 'இப்புடியா' ஒருநாள் முழுக்க... 'அலாரம்' வச்சு அடிக்குறது?
- 'பேபி உன்ன மிஸ் பண்றேன்'...'செல்ஃபி அனுப்பு'... 'அலறிய இளம் பெண்'... சென்னை வாலிபர் செய்த அட்டகாசம்!
- "அங்க தொட்டு... இங்க தொட்டு... கடைசில...!" 'மார்க் ஜுக்கர்பெர்க்' மடியிலேயே கை வெச்சுட்டிங்களே... "அடேய் ஹேக்கர்ஸ் உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா..."
- 'கொரோனா' வைரசால்... 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 'எரிக்கப்பட்டு' இருக்கலாம்?... 'ஷாக்' கொடுக்கும் பிரபல கோடீஸ்வரர்!