‘இன்ஸ்டாகிராம்ல மத்தவங்க யாரும் இத பாக்கமுடியாது’.. சோதனை முயற்சியில் இறங்கிய நிர்வாகம்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்பயனர்களின் மன அழுத்ததை குறைக்க இன்ஸ்டாகிராம் செயலில் அதன் நிர்வாகம் ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இன்ஸ்டாகிராம் என்னும் செயலியை உபயோகித்து வருகின்றனர். பேஸ்புக் செயலியைப் போலவே போட்டோ, வீடியோ போன்றவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வசதியுள்ளது. மேலும் பேஸ்புக் போல லைக்ஸ், கமெண்ட் போன்ற ஆப்சன்களும் இதில் உள்ளன. இதனால் போட்டோ, வீடியோவை பதிவிட்டு அதற்கு எத்தனை லைக்ஸ், கமெண்ட் வந்தது என்பதை அறிய போட்டிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் சிலர் மன சோர்வுக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க இன்ஸ்டாகிராம் நிர்வாகம் ஒரு முடிவெடுத்துள்ளது. அதில் இனிமேல் ஒரு பயனரின் லைக்ஸ், கமெண்ட்களை மற்றொரு பயனர் பார்க்க முடியாத வகையில் அப்பேட் கொண்டுவந்துள்ளது. இது முதலில் கனடாவில் தொடங்கப்பட்டு, பின்னர் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரேசில், இத்தாலி, நியூஸிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனை முயற்சியின் மூலம் பயனர்களிடம் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் பிற நாடுகளுக்கும் இதனை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கூல் தல'.. 'ஃபன்.. டான்ஸ்.. பர்த்டே கொண்டாட்டம்'.. இன்னும் என்னலாம் நடந்துச்சு? .. வைரல் வீடியோ!
- 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு'.. சரிசெய்யப்பட்ட #FacebookDown பிரச்சனை!
- 'அந்த பொண்ணுங்களை நம்பி' ...'எதையும் சொல்லாதீங்க'... 'அப்புறமா மாட்டிக்காதிங்க' !
- “இப்டியுமா மனிதர்கள் இருப்பாங்க”!.. ‘இன்ஸ்டாகிராமால் விபரீத முடிவு எடுத்த பெண்’!.. பதற வைக்கும் சம்பவம்!
- 'மேடம் உங்க செல்போன் இதுவான்னு பாருங்க’.. ஆச்சர்யப்பட வைத்த திமிங்கலம்.. வீடியோ!
- 'என்ன 'தல'...இப்படி 'பீல் பண்ண வச்சிட்ட'....நெகிழ்ந்து போன 'பிரபல வீரர்'!
- ‘ஆஹா.. இப்ப இதுங்களாம் இப்படி எறங்கிடுச்சா..’ இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ணும் சிம்பன்ஸி!
- ‘அதுக்கு பழகி இதுக்கு செட் ஆயிருச்சு’.. விமான நிலையத்தில், தரையில் படுத்து தூங்கும் தல!
- சானியாவின் சகோதரிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகனுக்கும் திருமணமா? .. வெளியான தகவல்!