‘இன்ஸ்டாகிராமில் வந்த புதிய அப்டேட்’... ‘இனி தாராளமா ரிப்போர்ட் பண்ணலாம்’!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பதிவுசெய்த தகவல் பொய்யான பதிவு என நினைத்தால், அதனை ரிப்போர்ட் செய்யும் வசதி இன்ஸ்டாகிராமில் புதிதாக சேர்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை போன்று இன்ஸ்டாகிராமையும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பிரபலங்கள் அதிகளவில், தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வது வழக்கம். இந்த இன்ஸ்டாகிராமை, ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியப் பிறகு புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சமூக வலைத்தளங்கள் மூலம் பொய்யான தகவல்கள், வதந்திகள் பரப்பப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வரப்படுகின்றது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் ஒரு பதிவு பொய் என நினைத்தால், அதனை பயன்பாட்டாளர்கள் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 54 ஃபேக்ட் செக்கிங் பார்ட்னர்களுடன் இணைந்து, 42 மொழிகளில் அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக அமெரிக்க இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு மட்டும் இந்த  அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

INSTAGRAM, FALSE, INFORMATION, REPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்