"அந்த செயலி பாதுகாப்பனதல்ல!".. 'வார்னிங்' கொடுத்தும் கேட்காமல் 'முதல் இரண்டு' இடங்களைப் பிடித்த 'இந்தியா & அமெரிக்கா'!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தும் வீடியோ அழைப்புக்கான கான்ஃபிரன்ஸ் செயலியான ஜூம் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவை விடவும் அதிகமாக இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கொரோனா சூழலால், பெரும்பாலும் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வரும் நிலையில், மிக முக்கியமான செயலாக மாறியது ஜூம் செயலி. குறிப்பாக அலுவலக மீட்டிங், மாணவர்களுக்கான பாடம் கற்பது, பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்படுவது உள்ளிட்டவை அனைத்தும் ஜூம் செயலி மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் அண்மையில் இந்த ஜூம் செயலியில் உள்ள பயனாளர்களின் தனிநபர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, அவர்கள் பற்றிய தகவல்களும் தரவுகளும் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இதனை அடுத்து ஆன்லைன் கான்ஃபரன்ஸ் செயலியான இந்த ஜூம் செயலியை பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்தான் மேலும் அதிர வைத்துள்ளது. இப்படி எச்சரிக்கை விடுத்திருந்தும், சர்வதேச அளவில் இந்த ஜூம் செயலியை கடந்த ஏப்ரல் மாதம் பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியே 10 லட்சம் பேர் என்று தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 18.2 சதவீத மக்கள் இந்தியர்கள் என்றும் அதிகபட்சமாக 14 சதவீத மக்கள் அமெரிக்கர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அதாவது இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் 60 மடங்கு அதிகம் என்பதுதான் இதில் உள்ள அதிரவைக்கும் தகவல்.
இதேபோல் இன்னொரு வீடியோ கான்ஃப்ரன்ஸிங் செயலியான டிக்டாக்கினை சர்வதேச அளவில் 10 கோடியே 70 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளதாகவும், இவர்களுள் அதிகபட்சமாக 22 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதும் செயலிகளை கண்காணிக்கும் சென்சார் டவர் அமைப்பு அறிவித்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஜூலை மாதம் இறுதியில் உச்சத்தை எட்டும்...' 'மக்கள் நெருக்கம்' அதிகம் என்பதால் 'கட்டுப்படுத்துவது கடினம்...' 'இந்தியா குறித்து WHO அதிர்ச்சித் தகவல்...'
- 'அந்த' நிலை இங்கு வராது... தொடர்ந்து 'உயரும்' பாதிப்புக்கு இடையே... 'ஆறுதல்' தரும் தகவல்களுடன் சுகாதாரத்துறை மந்திரி 'நம்பிக்கை'...
- “உலகம் முழுவதும் 4 மில்லியனை தொட்ட கொரோனா!”.. அமெரிக்காவில் 80 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை!
- ‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’!
- 'சிகிச்சை' பெறும் கொரோனா நோயாளிகளுக்கு 'அருகிலேயே' உயிரிழந்தவர்களின் 'உடல்கள்'... வைரலாகும் வீடியோவால் 'அதிர்ச்சி'...
- 'சளி, காய்ச்சல் தானேன்னு தப்பா நினைச்சிட்டீங்க'... 'வல்லரசுகளுக்கு கொரோனா காட்டிய மரண பயம்'... தரவரிசையில் வந்த இந்தியா!
- 'போர் மூளும் அபாயம்!'.. அறிக்கையை சமர்பித்த சீன அதிகாரிகள்... அதிர்ந்து போன அதிபர் ஜின்பிங்!.. வெளியான பரபரப்பு தகவல்!
- இதுவரை இல்லாத அளவு 'உயர்ந்த' வேலையின்மை சதவீதம்... நான்கில் 'ஒரு இந்தியருக்கு' பாதிப்பு... 'சிஎம்ஐஇ' தகவல்...
- இன்று 'ஒரேநாளில்' மட்டும் '841' பேர்... 15 ஆயிரத்தை கடந்தது 'பாதிப்பு' எண்ணிக்கை!
- 'அந்த நாட்டில் இருந்து'... 'வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க'... ‘இந்தியாவின் ராஜதந்திரம்’... ‘ஆர்வம் காட்டும் மாநிலங்கள்’!