'மெசேஜ்' பாக்குறதுக்குள்ள 'டெலீட்' பண்ணிட்டாங்களே...! அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க...? - மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி...!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை டெலீட் செய்யும் வசதியை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இதனால் தவறாக அனுப்பப்பட்ட மெசேஜ்கள், அனுப்பிய பிறகு அந்த மெசேஜ்-க்கான தேவை இல்லை என்னும் பட்சத்தில் டெலீட் செய்து விடுவர்.

சில நேரங்களில், அந்த நீக்கப்பட்ட மெசேஜில். எனவே, டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை படிக்க பலருக்கும் ஆவல் தோன்றும். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ வழி ஒன்று இப்போது உள்ளது. ஆனால் Google Play ஸ்டோரில் மட்டுமே அதற்கான ஆப்கள் உள்ளன. அவை டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை படிக்க உதவுகிறது.

Notisave என்ற செயலி Google Play ஸ்டோரில் கிடைக்கிறது. இதில் மெசேஜ் வாட்ஸ்அப்பில் டெலிட் ஆன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் GIF களை மீட்டெடுக்கவும் உதவுகிறது. Notisave செயலி(app) மூலம் எப்படி டெலீட் ஆனா மெசேஜ்களை திரும்ப படிப்பது எப்படி?

அ) முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள Google Play ஸ்டோருக்கு செல்லுங்கள். அதில் Notisave என்று டைப் செய்து சர்ச் கொடுக்க வேண்டும். பின்பு அதை  டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ஆ) உங்கள் வாட்ஸ்அப் செயலி எந்த மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதோ அந்த ஸ்மார்ட்போனில் Notisave செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இ)  வாட்ஸ்அப் ஐகானைக் காட்டும் Notisave செயலியின் முகப்புத் திரைக்குச் செல்லவும்.

ஈ) அதில் வாட்ஸ்அப் ஐகானைத் தேர்ந்தெடுத்து, டெலிட் செய்யப்பட்ட அனைத்து செய்திகளையும் நீங்கள் காணலாம்.

உ) மேலும் ஒரு குறிப்பிட்ட காண்டாக்ட்டை மட்டும் காண Notisave செயலி அனுமதிக்கிறது. அதற்கு பில்டர் காண்டாக்ட் ஆப்ஷனை தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: முக்கியமான விஷயம் என்னவென்றால் Notisave செயலி விளம்பரங்களுடன் வருகிறது மற்றும் இது பாதுகாப்பான பயன்பாடு அல்ல என்பதை கவனத்தில் கொள்வதும் அவசியம் ஆகும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்