ஸ்மார்ட் போன்களில் 'கொரோனா' வைரஸ்... எத்தனை நாட்கள் 'உயிர்' வாழும்?... 'புதிய' தகவல்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஸ்மார்ட் போன்களில் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர் வாழும்? என்பது குறித்து ஆய்வொன்றில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய ஊரடங்கு காலத்தில் ஒவ்வொருவரின் உற்ற துணையாக விளங்குவது ஸ்மார்ட் போன்கள் தான். சமூக வலைதளங்கள், வாட்ஸ் ஆப், படங்கள், சீரியல்கள், பாடல்கள், வீடியோ என அனைத்தும் உள்ளங்கைக்குள் அடங்கி விடுவதால் இளைய தலைமுறையினர் தொடங்கி முதியவர்கள் வரை ஸ்மார்ட் போன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்றாற்போல நெட்வொர்க் நிறுவனங்களும் டேட்டா கட்டணங்களை தற்போது ஆபர் விலையில் வழங்க ஆரம்பித்து இருக்கின்றன. குறிப்பாக பலரும் தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்து இருப்பதால் டேட்டா மக்களின் உயிர்நாடியாகவே மாறிப்போய் இருக்கிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் போன்களில் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர் வாழும்? என்பது சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 2003-ம் ஆண்டு கண்டறியப்பட்ட சார்ச்-கோவ் வைரஸ் கிளாஸ் மீது 96 மணி நேரம் அதாவது நான்கு நாட்கள் உயிர் வாழும் என கண்டறியப்பட்டது. கிளாஸ் தவிர்த்து கடுமையான பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின் ஸ்டீல் மீது 72 மணி நேரங்கள் உயிர் வாழும் என கண்டறியப்பட்டது. அதே போல தற்போது கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர் வாழும் என ஆரோக்கியத்திற்கான தேசிய மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்டீல் மற்றும் கடுமையான பிளாஸ்டிக் மீது கொரோனா வைரஸ் 72 மணி நேரம் உயிர் வாழும் என கண்டறியப்பட்டது.
அதேபோல கார்டுபோர்டின் மீது 24 மணி நேரமும் பித்தளை மீது 4 மணி நேரமும் உயிர் வாழும் என கண்டறியப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் முன்புறத்தில் கண்ணாடி பேனலுடன் வருவதால், கொரோனா வைரஸ் ஒரு ஸ்மார்ட்போனில் 96 மணிநேரம் வரை கண்ணாடி மீது இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் NIH ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் தவிர, கண்ணாடி மேற்பரப்புகள் கொண்ட, ஸ்மார்ட்வாட்ச், டேப்லெட், லேப்டாப் போன்ற அனைத்து விதமான கேஜெட்டிற்கும் இது பொருந்தும்.
அதனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன், லேப்டாப் ஆகியவற்றை சுத்தம் செய்வது தற்போது மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா பரவலை தடுக்கணும்’!.. ‘தேவையில்லாம யாரையும் வெளியே போகவிடமாட்டேன்’.. கையில் கட்டையுடன் இளம்பெண் எடுத்த அதிரடி..!
- 'ரகசியமாக' பறந்த தகவல்... 'சம்பவ' இடத்திற்கே சென்ற போலீசார்... சாமி 'சத்தியமா' இனி பண்ண மாட்டோம்!
- டெல்லியில் இருந்து தென்னிந்தியா நோக்கி கொரோனா படையெடுத்தது எப்படி?... கொரோனாவின் தீவிரம் ஏன் ஈரோட்டில் அதிகமாக உள்ளது?... சிறப்பு தொகுப்பு!
- ‘இரவு உணவு 1.45 மணிக்கு ’!.. ‘ரெஸ்ட்டே இல்லாம வேலை பாக்குறோம்’.. ‘எங்களுக்காக இத மட்டும் பண்ணுங்க’!
- “யாராச்சும் ஏப்ரல் 1-ஆம் தேதி முட்டாள் தினம்னு, கொரோனா நேரத்துல இதெலாம் பண்ணீங்க” .. எச்சரித்த அமைச்சர்!
- “மணிக்கு ஒரு முறை செஃல்பி எடுத்து அனுப்புங்க!”.. ‘வீட்லயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு’ .. அமைச்சர் அதிரடி!
- ‘இத்தாலியில் இருந்து வந்த மகன் குடும்பத்தால் பாதிப்பு’... ‘90 வயதில் கொரோனாவை வென்று’... ‘நாட்டுக்கே நம்பிக்கையூட்டிய முதிய தம்பதி’... ‘கைதட்டி ஆரவாரம் செய்த கேரளா மருத்துவர்கள்’... ‘ஆனாலும் செவிலியருக்கு நேர்ந்த சோகம்’!
- 'உலகத்துக்கு துரோகம் செய்ததா சீனா!?'... சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சரமாரி கேள்வி!... என்ன செய்யப்போகிறது சீன அரசு?
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- '2000 பேர்' பங்கேற்ற 'மத நிகழ்ச்சி'... '200' பேருக்கு 'வைரஸ் தொற்று'... 'தமிழகத்திலிருந்து' பங்கேற்ற '82 பேருக்கு' அறிகுறி...