'கூகுளின் ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக’... ‘புதிய இயங்குதளம் அறிமுகம்’!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கூகுளின் ஆண்ட்ராய்டுக்குப் போட்டியாக, புதிய இயங்குதளத்தை , சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகெங்கும் ஸ்மார்ட் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக கூகுளின் ஆண்ட்ராய்டு உள்ளது. ஆப்பிள் போன்களைத் தவிர்த்து பிற அனைத்து ஸ்மார்ட் போன்களும் இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தான் இயங்குகின்றன. ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமான சீனாவின் ஹவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களும் ஆண்ட்ராய்டு தளத்தைத்தான் பயன்படுத்தி வந்தன.
இந்நிலையில் அமெரிக்க-சீன வர்த்தகப் போர் தீவிரமடைந்ததால், இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘அமெரிக்க நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது’ என்ற தடைவிதித்தார். இதனால் அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் தயாரிக்கும் ஆண்ட்ராய்டை, சீனாவின் ஹவாய் நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் டிரம்ப் இந்த தடையை விலக்கினார் என்றாலும், அமெரிக்க நிறுவனத்தின் இயங்கு தளத்தை மட்டுமே நம்பியிருந்த ஹவாய் நிறுவனம் பின்வாங்கவில்லை.
இதனால் வெறும் இரண்டே மாதங்களில் கடினமாக உழைத்து ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக ஒரு புதிய இயங்குதளத்தையே உருவாக்கி உள்ளது ‘ஹவாய்’. ஹார்மனி ஓஎஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளம், சீனாவின் டங்குவான் நகரத்தில் நடைபெற்ற மென் பொறியாளர்கள் மாநாட்டில் கடந்த 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டைப் போலவே ஓபன் சோர்ஸ் இயங்குதளமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த ஹார்மனியை யார் வேண்டுமானாலும், தங்கள் செல்போனில் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.
செல்போன்கள் தவிர ஸ்மார்ட் டிவிக்கள், ஸ்மார்ட் வாட்சுகள், வாகனங்கள் போன்றவற்றிலும் இதைப் பயன்படுத்த முடியும். தற்போது ஹவாயின் செல்போன்களில் ஆண்ட்ராய்டோடு, ஹார்மனிக்கும் இடம் கொடுக்கப்பட்டு உள்ளது, ஒருவேளை எதிர்காலத்தில் அமெரிக்க-சீன வர்த்தக யுத்தம் மேலும் தீவிரமடைந்தால், ஹவாய் உள்ளிட்ட சீன நிறுவனங்கள் ஒரேயடியாக ஆண்ட்ராய்டுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, ஹார்மனியின் பக்கம் தாவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயங்குதளம் தற்போது பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சரியாக மூடாத பாதாள சாக்கடை’.. ‘நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்’.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
- 'என்ன ஒரு பொய்'... ‘ட்விட்டரில் சுந்தர் பிச்சையை சாடிய’... ‘அதிபர் டொனால்ட் ட்ரம்ப்’!
- 'கயிற்றால் இறுக்கப்பட்டு, கழுத்து'.. ஒரு நொடியில் 'சிறுமி செய்த' காரியம்.. பதறவைத்த வீடியோ!
- 'திடீரென எழுந்த அலை'... ‘ஆபத்தாக மாறிய விளையாட்டு’... 'பொழுதுபோக்கு பூங்காவில் நிகழ்ந்த விபரீதம்'!
- திடீரென வேலை செய்யாத ‘ஃபேஷியல் ஃபில்டர்’.. ‘லைவ் வீடியோவில் மாட்டிக்கொண்ட பிரபல ஸ்டார்..’
- 'விட்ராதடா தம்பி, விட்ராத'... 'பால்கனியில் சிக்கிய சிறுவன்'... பதைபதைக்க வைக்கும் வீடியோ!
- 'இதென்னடா ரெஸ்டோரண்டுக்கு வந்த சோதனை'.. 'பரபரப்பைக் கிளப்பிய மிதக்கும் பில்டிங்'.. வைரலாகும் வீடியோ!
- 'எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல'...'LinkedIn'ல் வந்த அறிவிப்பு'... 'அதிர்ந்து போன கூகுள்'!
- அட்டைப் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய.. ‘5 வயது சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
- எஸ்கலேட்டர் விபத்தில் சிக்கிய.. ‘மூதாட்டிக்கு நடந்த பயங்கரம்..’