இந்திய இளைஞருக்கு அடிச்ச ஜாக்பாட்.. ரூ.65 கோடி சன்மானம் கொடுத்த கூகுள்.. எதுக்கு தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஆண்ட்ராய்டில் உள்ள குறைகள் கண்டுபிடித்த இந்திய தொழில் நுட்ப வல்லுநருக்கு 65 கோடி ரூபாய் சன்மானம் கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ரோகித் இதை கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்கலாமே.. கோலி உடனான மோதல் சர்ச்சை.. முன்னாள் வீரர் சொன்ன பதில்..!

கூகுள் நிறுவனம்

ஆண்ட்ராய்டில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதுதொடர்பாக விரிவான தகவல்களை இந்தியாவை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி ரிசர்ச்சரான (Indian cybersecurity researcher) அமன் பாண்டே (Aman Pandey) என்பவர் சமர்பித்துள்ளார். இதை ஆய்வு செய்த கூகுள் நிறுவனம் அவரை பாராட்டியுள்ளது. மேலும் அவரை ஊக்கப்படுத்தும் வகையில் சன்மானம் கொடுத்தும் அசத்தியுள்ளது.

குறைபாடுகள்

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பக்ஸ்மிரர் (Bugsmirror) நிறுவனத்தை சேர்ந்த அமன் பாண்டே குறைபாடுகளை புகாரளிக்கும் மற்றும் சமர்ப்பிப்பதில் சிறந்த ஆராய்ச்சியாளராக கருதப்படுகிறார். கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் 232 குறைபாடுகளை கண்டறிந்து அதுதொடர்பாக விரிவான தகவல்களை சமர்ப்பித்துள்ளார். இதன்மூலம் எங்கள் திட்டத்தை மிகவும் வெற்றிகரமானதாக்குவதில் அமன் பாண்டே முக்கியப் பங்கு வகித்து உள்ளார்’ என்று குறிப்பிட்டு இருக்கிறது.

பாராட்டு

இதனை அடுத்து அமன் பாண்டே, 2021-ல் கூகுளின் பக் பவுண்டி ப்ரோகிராமில் (Bug bounty program) முதலிடம் பிடித்துள்ளார். இது கூகுளின் Bug bounty program-ன் ஒரு பகுதி. இந்த திட்டத்தின் கீழ், கூகுள் நிறுவனம் தனது சாப்ட்வேரில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை கண்டறியும் சைபர் பாதுகாப்பு நிபுணர்களுக்கு வெகுமதியையும் அளிக்கிறது. அதன்படி அமன் பாண்டேயின் பங்களிப்புகளுக்காக கூகுள் அவரை அங்கீகரித்துள்ளது.

இந்திய தொழில் நுட்ப வல்லுநர்

பக்ஸ்மிரர் நிறுவனம் இந்தூரிலிருந்து இயங்குகிறது. இதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமன் பாண்டேதான். NIT Bhopal-ல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமன் பாண்டே குறைபாடுகளை சமர்ப்பித்து வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சன்மானம்

இந்த நிலையில் குறைபாடுகளை கண்டறிந்ததற்காக சுமார் 8.7 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.65 கோடி) வெகுமதியாக பக்மிரர்ஸ் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டில் மட்டுமின்றி, கூகுள் குரோம், சர்ச், ப்ளே மற்றும் பிற தயாரிப்புகளிலும் பாதிப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் 300,000 டாலரை பக்மிரர்ஸ் நிறுவனம் தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக கொடுத்துள்ளது. குறைபாடுகளை கண்டறிந்தற்காக கொடுக்க சன்மானங்களில் இதுதான் அதிக தொகை என சொல்லப்படுகிறது.

அதெப்படி மிதாலியை பார்த்து அப்படி சொல்லலாம்.. கொதித்த இந்திய வீராங்கனை.. இங்கிலாந்து கமெண்ட்டேட்டருடன் வெடித்த வார்த்தை போர்..!

GOOGLE REWARDS, INDIAN TECHIE, ANDROID SAFE, INDIAN CYBERSECURITY RESEARCHER, VULNERABILITIES IN ANDROID, OS SAFER, கூகுள், இந்திய இளைஞர், சன்மானம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்