'கூகுள் பே-வுக்கு தடையா?'.. 'இதன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பானதா?".. 'உண்மை என்ன?'
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கோடிக்கணக்கானோர் இந்தியாவில் தினசரி பணப்பரிவர்த்தன பயன்பாட்டுக்காக உபயோகிக்கும் செயலியாக கூகுள் பே மாறியுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் வணிக சட்டங்களுக்குட்பட்டு கூகுள் பே செயலி செயல்படவில்லை என்றும், இதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதியை முறையாகப் பெறவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தபோது ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து , கூகுள் பே, எந்தப் பணப்பரிமாற்ற அமைப்பையும் கொண்டிருக்கவில்லை என்றும் மாறாக, இது மூன்றாம் தர பணப்பரிமாற்ற செயலிதான் என்றும் குறிப்பிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் தங்களுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் வங்கிகளுக்கு இடையே பணப்பரிமாற்றம் செய்ய தொழில்நுட்ப ரீதியாகவே, தாங்கள் உதவுவதாக கூகுள் பே விளக்கம் அளித்துள்ளது. மேலும் தாங்கள் வெளியிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு பணப் பரிமாற்றாளர்கள் பட்டியலின் கீழ் கூகுள் பே வருவதாகவும் என்பிசிஐ தன் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளது.
இதனிடையே ’கூகுள் பே’ செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக சமூக வலைதளத்தில் பரவிவருகின்றன. ஆனால் உண்மையில் ரிசர்வ் வங்கியானது கூகுள் பே செயலிக்கு தடை எதையும் விதிக்கவில்லை என்பதும் கூகுள் பே செயலியில் பணத்தை அனுப்புவதும் பாதுகாப்பானதாக அல்ல என்று பரவும் வதந்தி உண்மை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்!'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்!
- '1,716 ரூபாய் மளிகை பொருட்களுக்காக 1.02 லட்சம் ரூபாய் அபேஸ்...' இந்த லிங்க் க்ளிக் பண்ணுங்க பணம் ரிட்டர்ன் வந்திடும்...! கஸ்டமர் கேரினால் நடந்த ஆன்லைன் மோசடி...!
- "நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது!".. ரத்தன் டாடா உருக்கமான கடிதம்!.. என்ன நடந்தது?
- 'ஆன்லைன்ல எப்படிங்க வெங்காயம் வாங்குறது?'.. 'எதுக்குங்க?'.. வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. உஷார்!
- 'அவங்க நேர்ல வந்தா தான் துட்டு...' 'வேலையும் இல்ல, பணமும் இல்ல...' அப்படின்னா வேற வழியே இல்ல...'100 வயது தாயை கட்டிலில் இழுத்துக்கொண்டு வங்கிக்கு சென்ற மகள்...!
- 7ம் வகுப்பு வரை "ஆன்லைன்" கல்விக்கு "தடை"!.. அதிரடியாக அறிவித்த 'மாநில' அரசு!.. ஏன்?
- 'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு!?'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்!.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
- 'படிப்புல ரொம்ப கெட்டிக்காரி... அவசர பட்டுடியே தங்கம்!'.. ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத விரக்தியில்... மாணவி எடுத்த 'மனதை' சிதறடித்த முடிவு!
- "1 கோடி ரூபாயா?.. கொரோனா காலத்துல குடும்ப கஷ்டத்தையே இல்லாம பண்ணிடுவேன்!".. 'நம்பி இருந்த' இளம் பெண்ணுக்கு 'ஒரு நொடியில்' நேர்ந்த 'பரிதாப கதி'!
- ஊரடங்கால் சரிந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி!.. 'அம்பானி' போட்ட மாஸ்டர் ப்ளான்!.. அலறும் போட்டியாளர்கள்!.. தெறிக்கவிடும் புதிய திட்டம்!