குறையை கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு ரூ. 25 லட்சம் பரிசு.. கூகுள் வெளியிட்ட வெயிட்டான அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கூகுள் நிறுவனம் தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு 25 லட்ச ரூபாய் வரையில் பரிசு அளிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.
டெக்னாலஜி துறையில் ஜாம்பவானாக திகழ்கிறது கூகுள் நிறுவனம். உலகின் மிகப்பெரிய ஓபன் சோர்ஸ் பிராஜெக்ட்களில் இயங்கிவரும் கூகுள் நிறுவனம் சமீபத்தில் தொடர்ந்து தாக்குதலை சந்தித்து வருவதாக தெரிவித்திருந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு ஓபன் சோர்ஸ் பிராஜெக்ட்கள் மீதான தாக்குதல்கள் 650 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்த நிலையில், இதை சரிசெய்யும் திட்டங்களையும் பரிசீலித்து வந்தது. இந்நிலையில் தான் இந்த பரிசுத்தொகை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
திட்டம்
ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் வல்னரபிலிட்டி ரிவார்ட் புரோகிராம் (Open Source Software Vulnerability Rewards Programme) அல்லது சுருக்கமாக OSS VRP எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் பல படிநிலைகள் வழியாக பரிசுகளை அளிக்க இருக்கிறது. கூகுள் மென்பொருளில் உள்ள GitHub ஆக்ஷன்ஸ், அப்ளிகேஷன் கான்ஃபிகரேஷன் (application configurations), ஆக்சஸ் கண்ட்ரோல் ரூல்ஸ் (access control rules) ஆகியவற்றில் பிழைகளை கண்டுபிடிக்கும் நிபுணர்களுக்கு 100 டாலர்களில் துவங்கி அதிகபட்சமாக 31 ஆயிரத்து 337 டாலர்கள் வரை (இந்திய மதிப்பில் 25 லட்ச ரூபாய்) சன்மானம் வழங்கப்பட இருக்கிறது.
Business Standard
பரிசு
அந்நிறுவனத்தின் பேசல், ஆங்குலர், கோலாங், புரோட்டோகால் பஃபர்ஸ் மற்றும் ஃபுச்சியா போன்ற முக்கிய திட்டங்களில் பிழைகளை கண்டறிபவர்களுக்கு சிறந்த பரிசு வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக அசாதாரணமான அல்லது குறிப்பாக சுவாரஸ்யமான பாதிப்புகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு அதிக தொகை வழங்கப்படும் என இந்த திட்டத்தை அறிவிக்கும் போது கூகுள் தெரிவித்திருந்தது.
இதன்மூலம் கூகுள் நிறுவனம் தனது ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நிபுணர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "வேலைக்கு சேர்ந்தா அங்க தான்.." 39 முறை பிரபல நிறுவனத்தில் முயற்சி... கடைசியில் வாலிபருக்கு காத்திருந்த 'சர்ப்ரைஸ்'
- கருக்கலைப்புத் தடை உத்தரவு..! "உங்கள் விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படும்.!" - பெண் ஊழியர்களுக்காக கூகுள் அதிரடி..
- ரோட்டை மறித்து பார்க் செய்யப்பட்ட வாகனங்களை போட்டோ எடுத்து அனுப்பினால் 500 ரூபாய் பரிசு..ஆகா.. இது நல்லா இருக்கே.!
- "கூகுள் சொல்றபடிதான் வைத்தியம் பார்க்கணும்னா"...போஸ்டர் ஒட்டிய டாக்டர்.. யாரு சாமி இவரு?
- கேம்பஸ் இண்டர்வ்யூவில் இந்திய மாணவரை செலெக்ட் செய்த கூகுள் நிறுவனம்.. சம்பளத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!
- இன்னும் படிப்பையே முடிக்கல.. அதுக்குள்ளே கூகுள் நிறுவனத்துல வேலை.. இந்தியாவுலயே ஒரு மாணவருக்கு இவ்வளவு சம்பளம் கிடைச்சது இல்லயாம்..!
- அப்பாடா... கூகுள் Map ல வரவிருக்கும் புது ஆப்ஷன்.. இனி டிராவல் இன்னும் ஈஸியா இருக்கும்..
- Russia – Ukraine Crisis: "உக்ரைனுக்கு துணை நிற்போம்".. ஆப்பிள் நிறுவனம் எடுத்த பரபரப்பு முடிவு..
- Russia-Ukraine war: களத்தில் இறங்கிய கூகுள் .. ரஷ்யாவுக்கு பெரிய செக்.. திடீரென போட்ட அதிரடி கண்டிஷன்..
- "என்னால தூங்க முடியல..படபடப்பா வருது"..கூகுள் மீது கர்ப்பிணி தொடுத்த வழக்கு..என்னதான் நடந்துச்சு..!