‘இனி மெசேஜிலும் ஃபோட்டோ, வீடியோ ஷேர் செய்யலாம்’.. ‘இந்தியாவில் அறிமுகமானது கூகுளின் RCS மெசேஜிங் சேவை’..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஆப்பிளின் iMessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பிலிருந்து RCS எனும் மெசேஜ் சேவையை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
பல வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட SMS சேவைகள் தற்போது பெரும்பாலும் வங்கி, ஷாப்பிங் போன்ற வணிக ரீதியான தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. SMS சேவைக்குப் பதிலாகத் தான் வாட்ஸ்அப் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவைகள் வந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இது SMS மூலம் வருவாய் ஈட்டி வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரிய அடியே.
இந்நிலையில் இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக Rich Communication Service எனும் RCS சேவையை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். இதில் SMS போல எழுத்துகள் மட்டும் இல்லாமல், படங்கள், வீடியோக்கள் ஷேர் செய்யவும், க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், QR கோடு போன்றவைகளையும் பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் இவை அனைத்தும் உங்கள் மெசேஜ் ஆப்பிலேயே இருக்கும் எனவும், இதற்கு நெட்வொர்க் இல்லாமல் வைஃபை வசதியையும் உபயோகிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதை enable செய்ய உங்கள் கூகுள் Messages ஆப்பின் Settings பகுதிக்குச் சென்று, அதில் General பிரிவில் உள்ள Chat Features சென்று Enable Chat Features என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். தற்போது சில மொபைல்களில் மட்டுமே இதற்கான சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இது அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்த 17 App உங்க போன்ல இருக்கா..?’.. உடனே ‘டெலிட்’ பண்ணீருங்க...!
- 'உடல் முழுவதும் வெடிகுண்டு'.. 'அச்சுறுத்தும்படி போஸ் கொடுத்த பாடகி'...'ஹேப்பி தீபாவளி' சொன்ன நெட்டிசன்கள்!
- ‘36 வருஷத்துக்குப் பின்’... ‘துவங்கிய சேவை’... ‘சென்னை டூ யாழ்ப்பாணம்’... மகிழ்ச்சியில் பயணிகள்!
- 'குறைவான வருமானம்’... ‘செலவு அதிகம்’... '3-வது முறையாக’... ‘ஆள்குறைப்பில் பிரபல நிறுவனம்’!
- 'ஆண்ட்ராய்டு மக்களே உஷார்'...'இந்த 15 ஆப்ஸ் உங்க மொபைல்ல இருக்கா'?...உடனே தட்டி தூக்கிருங்க!
- ‘ஜாம்பவான்களின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்’ ‘ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'சோஷியல் மீடியா அக்கெவுண்ட்டுடன்’... ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா?'... விவரம் உள்ளே!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'எப்பவுமே கேப்டன்னா அவர் தான்'... 'இங்கிலாந்து முன்னாள் கேப்டன்'!