பேருந்து மற்றும் ரயிலில் பயணிப்பவர்களுக்காக.. ‘கூகுள் மேப் அறிமுகப்படுத்தும் புதிய சேவை..’

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சாலை போக்குவரத்து நெரிசலை அறிய உதவும் கூகுள் மேப் பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்பவர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

கூகுள் மேப் அறிமுகப்படுத்த உள்ள இந்த புதிய சேவை மூலம் செல்ல வேண்டிய இடம், தூரம், பயண நேரம், போக்குவரத்து நெரிசல் என அனைத்தையும் துல்லியமாகத் தெரிந்துகொண்டு பயணத்தைத் தொடங்க முடியும். மேலும் பயணம் செய்ய உள்ள பேருந்து மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசலையும் அறிவதற்கான சேவையை வழங்க உள்ளது கூகுள் மேப்.

இதில் நாம் காத்திருக்கும்போது வரக்கூடிய பேருந்தோ அல்லது ரயிலோ கூட்டமாக இருக்கிறதா, உட்கார இடம் இருக்கிறதா என்பது வரையான தகவல்களைப் பெற முடியும். கடந்த கால பயணங்களில் இருந்து பெற்ற தரவுகள் மற்றும் கூகுள் மேப் சேவையை ரயில், பேருந்துகளில் பயன்படுத்திய நபர்களிடம் இருந்து கேள்விகள் மூலம் இந்தத் தகவல்கள் பெறப்படும். நீங்கள் பயணித்த பேருந்தில் அதிக காலி இடங்கள் இருந்ததா?, குறைவான காலி இடங்கள் இருந்ததா? நிற்க மட்டும் இடம் இருந்ததா? அல்லது நெருக்கமாக நிற்க வேண்டி இருந்தா? என்ற கேள்விகளுக்கான பதில் மூலம் இந்த சேவையை வடிவமைத்து உள்ளது கூகுள் மேப்.

இதன்மூலம் போக்குவரத்து நெரிசல், அதனால் மாறியுள்ள பேருந்தின் பயண நேரம் என அனைத்தையும் கணிக்க முடியும். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்தியாவில் பயண பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சேவை ஒன்றை கூகுள் மேப் அறிமுகப்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து பேருந்து நெரிசலை அறிவதற்கான சேவையும் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இது முழுக்க முழுக்க பயனாளர்களை சார்ந்து இயங்குவதால் இதன் சேவை  துள்ளியமாக இருக்குமா என்கிற சந்தேகமும் மற்ற பயனாளர்களிடம் எழுந்துள்ளது.

GOOGLEMAPS, PUBLICTRANSPORTS, NEWFEATURE, INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்