'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்!'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

கொரோனாவால் ட்விட்டர் உள்ளிட்ட பல வலைநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியச் சொல்லி அனுமதி அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கொரோனா சூழல் சரியான பிறகு கூட, வீட்டில் இருந்தே பணிபுரிய விருப்பமானால் அவ்வாறு பணிபுரியலாம் என்றும்,  தவிர்க்க முடியாமல், அலுவலகம் வந்து பணிபுரிய வேண்டிய அளவிலான பணிகளில் உள்ளவர்கள் மட்டும் அலுவலகம் வந்து பணிபுரியுங்கள் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கூகுள் நிறுவன ஊழியர்களும் இதேபோல் இந்த கொரோனா சூழலில் நோய்ப்பரவலைத் தடுக்கும் விதமாக் வீட்டிலேயே பணிபுரிவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் உலகத்தையே இணையதளம் என்கிற ஒன்றுக்குள் கையடக்கமாக வைத்திருக்கும் கூகுள் ஊழியர்கள் தத்தம் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுமானால், ஊழியர்களுக்கு முக்கிய தேவைகளாக லேப்டாப், இணையதள வசதிகள் முக்கியமானவையாகின்றன.

முதன்மை அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகிக்கும் கூகுள் நிறுவனத்தில் அண்மையில்தான் தற்காலிக ஊழியர்கள் பலர் நிரந்தரமாக்கப்பட்டனர். எனினும் இன்னும் பாதிக்குப்பாதி கூகுள் ஊழியர்கள் தற்காலிக பணிகளில் இருக்கும் சூழலில், இந்த கொரோனா வந்துவிட்டதால், வீட்டில் இருந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. ஆனால் அவர்கள் பணிபுரியத் தேவையான லேப்டாப்கள் இல்லாததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த நிச்சயமற்ற நிலைமையை பொருத்துக் கொள்ளவும் விரைவில் இதை சீர்படுத்தவுள்ளதாகவும் கூகுள் தம் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக லேப்டாப் இல்லாதவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதைக் காட்டிலும், ஏற்கனவே லேப்டாப்கள் அளிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் பழுதுநீக்கக் கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதனிடையே வரும் ஜூன் மாதம் முதல் ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை பார்க்கச் சொல்லியிருக்கும் கூகுள், லேப்டாப் முதலான, வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகளற்ற ஊழியர்களுக்கே அலுவலகத்திற்கு வந்து  வேலை பார்ப்பதற்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்