அரசியல் பதிவு போட்டவரின் வீட்டுக்கே சென்று பேஸ்புக் அதிகாரிகள் சோதனையா?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்மக்களவைத் தேர்தல் வேளையில் விதிகளுக்குட்பட்ட பரப்புரையை மட்டுமே தேர்தல் ஆணையம் அனுமதித்து வருவதோடு, விதிமீறல்களை கவனித்து வருவதோடு, தக்க நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
பரப்புரை மட்டுமல்லாது, வலைதளங்கள் அல்லது சமூக வலைதளங்களூடேயான பரப்புரைகள் மற்றும் விளம்பரங்களையும் கண்காணித்து வருகிறது. மேலும் இந்த பொறுப்புகளை சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-ஆப் போன்ற அமைப்புகளே எடுத்துக்கொண்டதால் இன்னும் கூடுதல் கண்காணிப்புகள் நிகழ்கின்றன. அதன்படி, பேஸ்புக்கில் கட்சி, அரசியல், கொள்கை சார்ந்த விளம்பரங்களும், பரப்புரைகளும் கண்காணிக்கப்படவும் கட்டுப்படுத்தப்படவும் உள்ளதாக பேஸ்புக் முன்னமே தெரிவித்திருந்தது. இதே போல் பேஸ்புக்கின் ஓர் அங்கமான வாட்ஸ்-ஆப் செயலியைப் பொருத்தவரை போலித் தரவுகளை ஆராய்வதற்கான வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பேஸ்புக்கில் அரசியல் பதிவினை போட்ட நபரின் வீட்டுக்கேச் சென்று பேஸ்புக் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். கிட்டத்தட்ட பாஸ்போர்ட் வெரிபிகேஷன், சிபிசிஐடி ரெய்டு, ஐடி ரெய்டு போல இந்த சோதனை நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டும் பேஸ்புக் பயனாளர் , ‘நான் மட்டும்தான் அரசியல் பதிவுகளை போடுகிறேனா? இது என் பிரைவேசி அல்லவா?’என்று கேட்டுள்ளார். இந்த சோதனை குறித்து பேஸ்புக் தரப்பில் இருந்த எந்த ஒரு விளக்கமும் வெளியாகாத நிலையில், இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடைமுறை என பலர் விமர்சித்து வருகின்றனர்.
டெல்லியைச் சேர்ந்த அந்த நபரின் வீட்டில் பேஸ்புக் அதிகாரிகள் நடத்திய இந்த திடீர் சோதனையை தமது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ள IANS செய்தி நிறுவனம், இதுகுறித்த முறையான விளக்கம் கேட்டும் பேஸ்புக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. ஆனால் பேஸ்புக் நிர்வாகம் இந்தியாவில் தங்கள் கண்காணிப்பு உள்ளதே தவிர, வீட்டுக்கு சென்று சோதனையிடும் அளவுக்குச் செல்லவில்லை என்று சொல்லி, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் 2019: முதல் ஓட்டுப் போட்டது யார்? எந்த மாநிலத்தில் பதிவானது தெரியுமா?
- அட இதை கண்டு அச்சப்படும் அரசியல் கட்சிகள்! ஏன் தெரியுமா?
- ஆணா, பெண்ணா ஐயோ பாவம் அவரே கன்ப்பியூஸ் ஆய்டாரு போல! பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு!
- 'இது வேற லெவல்’.. பார்க்கில் சந்தித்துக்கொண்ட எதிர்க்கட்சி வேப்டாளர்கள்.. வாக்கு சேகரித்த ருசிகரம்!
- ‘அனுப்புனது பில்லுதான்.. ஆட்டய போட்டது ரூ.800 கோடி’.. எங்க போய் கைவெச்சிருக்காரு பாருய்யா!
- 'போலீஸை வச்சு ஏன் மிரட்டுறீங்க'?...பரபரப்பை கிளப்பியிருக்கும்...'கவர்னர் பேத்தியின்' வீடியோ!
- 'நாந்தான் இந்தியன்.. நாந்தான் இந்து.. நீங்க ஆண்டி இந்தியன்’.. சாடும் கரு.பழனியப்பன்.. அனல் பறக்கும் பேட்டி!
- ‘கூட்ட நெரிசலில் படுகாயமடைந்த புகைப்படக் கலைஞர்’.. களத்தில் இறங்கிய ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ!
- ‘அவர் நோட்டா அடிச்சுட்டு இருக்காரு..நோட்டாவுக்கு ஓட்டு போட்டால், நாட்ட யார் காப்பாத்துறது?’.. கமலின் பிரத்யேக பேட்டி பகுதி 2
- துணை முதல்வரின் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து.. பதறிய தொண்டர்கள்!