‘இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறையா’.. பேஸ்புக்கிற்கு வந்த சோதனை!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பேஸ்புக் நிறுவனம் புதிதாக தொடங்கவுள்ள ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம்  ‘லிப்ரா’ என்னும் டிஜிட்டல் பணத்தை(க்ரிப்டோகரன்ஸி) வரும் 2020 -ம் ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. ‘லிப்ரா’என்பது பிரெஞ்சு மொழியில்  ‘சுதந்திரம்’ என்கிற பொருள்படும் என லிப்ரா திட்ட வல்லுநர் டேவிட் மார்கஸ் தெரிவித்துள்ளார். இதைப் பயன்படுத்துவற்காக ‘கலிப்ரா’என்னும் வாலட் ஒன்றையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய செயலிகளுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனை உபேர், மாஸ்டர்கார்டு, பேபால், விசா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 2020 -ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுபோன்ற டிஜிட்டல் கரன்சியை அரசு வெளியிடாமல், தனியார் நிறுவனங்கள் வழங்குவது சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

முன்னதாக ஸ்டடி(study) என்னும் செயலியை இந்தியா மற்றும் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த செயலியின் மூலம் பேஸ்புக் பயனாளர்களின் அனுமதியுடன் அவர்களது பேஸ்புக் கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்திருந்தனர். இதன்மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் எனவும் இதற்காக பயனாளர்களுக்கு பணம் வழங்கப்படும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது.

FACEBOOK, LIBRA, FB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்