'ஃபேஸ்புக் லைவ் பண்ணனுமா'... 'அப்ப நீங்க இத எல்லாம் கடைப்பிடிக்கணும்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்துப்பாக்கிச்சூடு சம்பவம் நேரலை செய்யப்பட்டதை அடுத்து, நேரலை வசதியில் பேஸ்புக் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
நியூசிலாந்து - கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் 1 -ம் தேதி, காரிலிருந்து சென்ற ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டை அவர் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக வெளியிட்டார். துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை நடத்திய நபர், அதனை நேரலையாக பேஸ்புக்கில் ஒளிபரப்பியது உலகநாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இணையத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்பான நேரலைகளைக் கட்டுப்படுத்துமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், பேஸ்புக் பக்கத்தில் ஒருமுறை விதிமீறலில் ஈடுபடுவோருக்கு, நேரலை செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், விதிமீறலின் தன்மைக்கு ஏற்றவாறு தடையின் காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் எல்லா நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பகிரப்படும் வன்முறை தொடர்பான காணொளிகளைத் தடை செய்வது குறித்து, பாரிசில் உலகத் தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில், பேஸ்புக் அதன் நேரலை விதிமீறல் கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அமெரிக்காவிலிருந்து வந்த காதலி'... காதலனை 'காதலி'யே கடத்தியது அம்பலம்... 'அதிர்ச்சியூட்டும் காரணம்'!
- ’பேஸ்புக்கை பிரேக்-அப் பண்ண நேரம் வந்துடுச்சு’.. இவரே இப்படி சொல்றாரா? அதிர்ச்சிப் பின்னணி!
- 'அவன போக சொல்லுயா..'.. ‘நான் மாற்றுத்திறனாளி சார்’.. ‘அதுக்கு?’.. கிரிக்கெட் ரசிகரின் வருத்தமான போஸ்ட்!
- குடிபோதையில் பேருந்து ஓட்டுநரின் முகத்தை.. பாட்டிலால் பதம் பார்த்த சக ஓட்டுநர்!
- 'இங்கையுமா'?...'மணமேடையில வச்சு இப்படி செஞ்சிட்டீங்களே 'மாப்பிள்ள'...வைரலாகும் வீடியோ!
- 'இதல்லவோ பாசம்'.. பேஸ்புக் அதிபர் மார்க் ஸக்கர்பர்க், மனைவிக்காக உருவாக்கிய அன்புப் பரிசு!
- திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த செவிலியர்.. மருத்துவமனையிலேயே அரிவாளால் வெட்டிய தாய்மாமன்!
- தேர்தல் நன்னடத்தை விதிகளுக்காக, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் செய்துள்ள ‘அதிரடி’ காரியம்!
- 'இதுல மட்டும்தான் இன்னும் ஆதார இணைக்கல.. இப்போ அதுக்கும்’ .. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- இளைஞர் துண்டுத் துண்டாக வெட்டிப் படுகொலை.. ஈரோட்டில் பீகார் தம்பதி கைது..